இடுகைகள்

சுகுமாரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

            பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள் தொகுப்பு - சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல் கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம். பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும். திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம். முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்ள இந்த இரு கதைகளில் டைகர் சற்

உறவுச்சிக்கல்களை, ஆழ்மனதை, வினோதமான மனிதர்களை அறிமுகப்படுத்தும் கதைகள் - கச்சேரி - தி.ஜானகிராமன்

படம்
  கச்சேரி - இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள் தி.ஜானகிராமன் காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலில் மொத்தம் 26 கதைகள் உள்ளன.  இவை அனைத்துமே வாசிப்பை ஊக்குவிக்க கூடியவை. ரசித்தபடியே வாசிக்கலாம். அதில் எந்த பாதகமுமில்லை. இதில் வரும் ஸீடிஎன் =ரபெ 5 ஆர் , கச்சேரி என்ற இரு கதைகளையும் முன்னமே வாசித்திருக்கிறேன்.  ஸிடிஎன் என்பது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பேசுபவர்களுக்கானது. இந்த கதை இன்று பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் கடுமையாக பகடி செய்கிறது. இதில் வரும் கோஸ்வாமி, பசு சாணத்தில் ரயில் வண்டி தயாரிக்க முனைகிறார். எரிபொருளே இல்லாமல் தன்னைத்தானே ஓட்டிக்கொள்ளும் திறன் பெற்றது. இதைப்பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுப்பது போல அமைந்த கதை, வாசிப்பவர் யாரையும் சிரிக்க வைத்துவிடும்.  கச்சேரி சிறுகதை சிறுவன் ரங்குவுக்கும் கச்சேரி செய்யும் வித்வான் ஒருவருக்குமான அந்நியோன்ய உறவு பற்றியது. எவ்வளவு பெரிய கலைஞர் என்றாலுமே அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள்தானே? அப்படி வித்வானுக்கு கிடைப்பவன்தான் ரங்கு. நட்பு, அதில் பூக்கும் அன்பை பேசுகிற கதை.  நிலவு - கருமேகம் என்ற கதையை ம