இடுகைகள்

ஜெய்ராம் ரமேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

படம்
ஜெய்ராம் ரமேஷ்  ஜெய்ராம் ரமேஷ் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது? நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்? நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே.  திரிணாமூல் காங்க

அரசின் இயந்திரத்தில் தேசியவாத இஞ்சின் மட்டுமே இயங்குகிறது!

படம்
நேர்காணல் வளர்ச்சி இல்லாத தேசியவாதம் கேலிக்கூத்தானது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்கள்அவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும்  தன் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க கூடியவர். அவரிடம் பேசினோம். தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? பாஜக அரசு, தன் பட்ஜெட்டின்போதே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவன வரிவிதிப்பைக் குறைத்தபின்னும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை. இந்த வரி குறைப்பு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்தால்தான் பலன் கொடுக்கும். இதுவும் கூட யூகம்தான். மக்களின் தேவை என்பது இன்று குறைந்துவிட்டது. முதலீடு, ஏற்றுமதி ஆகியவை ஏறத்தாழ தேக்கமடைந்துவிட்டன. அரசின் வாகனத்திலுள்ள ஒரே இயக்கம் கொண்ட இஞ்சின் தேசியவாதம் மட்டுமே. அதுவும் கூட பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் இதற்கு மாற்றான தீர்வாக என்ன வைத்திருக்கிறது? காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்கு ஆதரவான பொருளாதார முடிவுகளை எடுத்து வந்தது. அரசிடம் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள்