இடுகைகள்

இறக்கும லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் உற்பத்தி! - இயற்கையை பாதிக்குமா?

படம்
  ஒன்றிய அரசு, வடகிழக்கு மாநிலங்களில் பாமாயிலை உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளது. சாதாரண பிற எண்ணெய் வித்துகளை விட பாமாயில் விளைவிக்க பனைக் கன்றுகளை ஊன்றுவது எதிர்காலத்தில் பயன் கொடுக்கும் என ஒன்றிய அரசு கருதுகிறது. விவசாயத்துறை இதற்கான அனுமதியை ஏற்கெனவே கொடுத்துவிட்டார்.  சூழலியலாளர்கள், ஒற்றைப் பயிரை மட்டுமே ஒரு இடத்தில் பணப்பயிராக வளர்ப்பது இயற்கை சூழலை கெடுக்கும் என்று கூறிவருகின்றனர். அரசு இதைக் காதுகொடுத்து கேட்கவே இல்லை.  11,040 கோடி ரூபாய் திட்டமாக இதனை பிரதமர் கடந்த வாரமே அறிவித்துவிட்டார். தேசிய சமையல் எண்ணெய்க்கான தேவையாக ஒன்றிய அரசு பாமாயிலை கருதுகிறது. இந்த திட்டம் 1980இல் பரிசீலிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக கைவிடப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  பனை கன்றுகளை மட்டுமே குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஊன்றுவது அங்குள்ள பன்மைத்துவ சூழலை குலைக்கும். நீர் தேவையை அதிகரிக்கும் என பல்வேறு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பனைக் கன்றுகள் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பயிர் கிடையாது. இதனை அங்கு விளைவிப்பது அதன் இயற்கையான தன்மைய