இடுகைகள்

ட்ரில்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிக்டாக்கிற்கு மாற்றாக பிரபலமாகி வரும் ட்ரில்லர் !

படம்
            டிக்டாக்கிற்கு மாற்றாக ட்ரில்லர் ! அமெரிக்கா , இந்தியா ஆகிய நாடுகளின் தடைக்கும் பிறகு உலகம் முழுக்க வேகமாக பரவும் அதேபோன்ற ஆப்தான் ட்ரில்லர் . இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இணைந்துள்ளார் . இந்த ஆப்பும் டிக்டாக் போலவேதான் . இதில் இணைபவர்கள் தங்களுக்கு பிடித்த பாடலைப் போட்டு டான்ஸ் ஆடி பகிரவேண்டியதுதான் . இதில் தங்களுக்குப் பிடித்தவர்கள் ரசித்து லைக் போட்டு பின்தொடர்பவர்கள் அப்படியே தொடரலாம் . 2015 ஆம் ஆண்டு ட்ரில்லர் ஆப் உருவாக்கப்பட்டுவிட்டது . ஆனால் பிரபலமானது , டிக்டாக் தடைக்கும் பிறகான ஓராண்டில்தான் . டிக்டாக் பயனர்கள் எல்லாருமே அப்படியே ஸ்பேர் பஸ்சுக்கு மாறுவது போல இந்த ஆப்புக்கு தாவி ஏறிவிட்டார்கள் . இன்றுவரை உலகம் முழுக்க 120 மில்லியன் (1 மில்லியன் - பத்து லட்சம் ) பேர் இதனை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள் . 27 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை தினசரி பயன்படுத்துகிறார்கள் . டிக்டாக்கில் புகழ்பெற்ற பிரபலங்களான ஜோஸ் ரிச்சர்ட்ஸ் , சார்லி டிஅமெல்லோ , ஜஸ்டின் பைபர் , டைனமோ , ரீடா ஓரா ஆகியோர் பிற பயனர்ளள் ட்ரில்லரைப் பயன்படுத்த தூண்டுகிறார்கள் .