இடுகைகள்

நரபலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!

படம்
  கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ் 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர், அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.   கத்தோலிக்கராக மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு, கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால் ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம் ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார். அடால்ஃபோவுக்கு

நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

படம்
  மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்   இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.   மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்   தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை கொல்வதற்காக வரும். த

தெரிஞ்சுக்கோ - காளி!

படம்
giphy காளி இந்துக்கடவுள். இந்த வரையறையைத் தாண்டி காளி என்றால் அழிவு சக்தி. இன்றும் இதற்காக பல்வேறு மனிதர்களை கொன்று நரபலி செய்பவர்கள் உண்டு. பெண் தெய்வ வழிபாட்டை சாக்தம் எனும் மதமாகவே இந்தியாவில் வளர்த்தெடுத்தார்கள். இன்று இந்த பாரம்பரியம் கேரளத்திலும், கோல்கட்டாவிலும் உள்ளது. இதைப்பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். கடவுள் என்பது தோன்றியபோது, மகாவித்யா எனும் பத்து பெண்கள் உருவாகின்றனர். இதில் காளிதான் முதல் இடத்தைப் பிடிக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கும் காளி நான்கு முதல் பத்து கரங்களைக் கொண்டிருப்பார். இந்தியாவில் 3 கோடிகளுக்கும் அதிகமான பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இதில் பொங்கல் தின்கிற கடவுள் முதல் கள்ளு குடித்து கருவாடு தின்னுகின்ற கருப்பண்ணசாமி வரை அடக்கம். மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை விழாவன்று அரசு விடுமுறையே உண்டு. காளியின் கழுத்தில் கிடக்கிற மண்டையோட்டை பார்த்திருப்பீர்கள். அதனை வர்ணமாலா என குறிப்பிடுகிறார்கள். இந்தியில் உள்ள எழுத்துக்களை குறிப்பது என்பது சிலரின் கருத்து. கடவுள்களை துதித்து அருள்பெற அவர்க