இடுகைகள்

தைவான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Rings of fire என்றால் என்ன? - தைவான் நிலநடுக்கம்!

படம்
  தைவான் நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தைவானில் நடந்த நிலநடுக்கம் இருபத்தைந்து ஆண்டு வரலாற்றில் தீவிரமானது. அமெரிக்க வல்லுநர்கள் கணிப்பில் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த இயற்கை பேரிடரில் எண்ணூறு பேர் காயமுற்றனர். ஒன்பது பேர் பலியானார்கள்.  நிலநடுக்கத்தின் தொடக்கம், தைவானின் கிழக்குப்பகுதி. அங்கே உள்ள ஹூவாலியன் கவுண்டி பகுதியில் உருவாகி வந்தது. இங்கு, பல்வேறு நிலநடுக்க அதிர்ச்சிகள் பதிவானது. அதில் ஒன்று, 6.5 ரிக்டர் அளவும் ஒன்று. உலகிலுள்ள நாடுகளில் தொண்ணூறு சதவீத நிலநடுக்க பாதிப்பு நடக்கும் நாடு, தைவான். இப்படியான நிலநடுக்க சூழல் கொண்ட நாட்டை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 1980ஆம் ஆண்டு தொடங்கி தைவானில் 4 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் என நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.  எண்ணிக்கையில் இரண்டாயிரத்திற்கும் மேல் வருகிறது. நூறு நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவு 5.5 என அமெரிக்க நிலநடுக்க ஆய்வு அறிக்கை கூறுகிறது.  பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலை, நிலநடுக்கப்பகுதிகளை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 40,240 கி.மீ. தொலைவில் அரைவட்ட அளவில் இப்பகுதி அமைந்துள்ள

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார்.  புரோச