இடுகைகள்

அகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

படம்
  மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம்.  மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவாகிறது. அதில் ம