இடுகைகள்

சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

படம்
  ராபர்ட் புல்லார்ட்  robert d bullard நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர்.  எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது.  இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராடி வருகிறார்கள். போர

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவாக்கிய பெ

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்கள். அவர்

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30

டைம் வார இதழின் சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  டைம் புதிய கண்டுபிடிப்புகள் 2023 லெனோவா  யோகா புக் 9ஐ இந்த யோகா புக்கைப் பயன்படுத்தி வீட்டில் வேலை செய்வது எளிது. 13.3 அங்குலத்தில் இரண்டு திரைகள் கொண்ட கணினி. மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட் என எப்படி வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓஎல்இடியில் இரண்டு திரை என்பது இந்த கணினியில் புதுசு. வாங்கி பயன்படுத்துங்கள். வடிவமைப்பில் அசத்துகிற கணினி இது.  அல்காரே பாட் கடல்பாசிகள் குளம், ஏரியில் அதிகரிப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை என்றால் காற்றிலுள்ள கார்பனை அதிகம் உள்ளிழுக்கும். தீமை என்றால் அழுகிப்போன வாடையோடு நீரிலுள்ள பிற உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும். இதை சரி செய்ய அல்காரே ரோபோட் உதவுகிறது. பாசிகளை நீரின் அடிமட்டத்தில் கொண்டு சென்று அழுத்து கார்பனை அங்கேயே தங்கியிருக்கச் செய்கிறது. வளைகுடா நாடுகள், புளோரிடா ஆகிய பகுதிகளில் இந்தரோபோட் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.  ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர்  டீ, காபி தரும் மெஷின்களை பார்த்திருப்போம். அதைப்போலவே உணவுக்குப் பயன்படுத்தும் சாஸ்களை ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் வழங்குகிறது. எப்படி என்பதில்தான் வித

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில் மக்

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட

புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?

படம்
  சீட்டா அறிமுகம் வெற்றி பெற்றதா? கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின் குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட் சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது   கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில் எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். உண்மையில் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர் பொருத்தப்பட்டதுதான்

பொதுவாக்கெடுப்பில் இயற்கையை காக்க முயன்ற மக்கள்! - ஈகுவடார் எண்ணெய்க்கிணறு வாக்கெடுப்பு

படம்
    யாசுனி தேசியப்பூங்கா எண்ணெய் கிணறு ஈகுவடார் நாட்டில் தேசியப்பூங்காவில் பெட்ரோலிய கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை இயற்கை செயல்பாட்டாளர்கள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். எனவே, அரசு வேறுவழியின்றி இதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது. அதில், மக்கள் பெட்ரோலியத் திட்டத்தை கைவிடவே அதிகளவு வாக்களித்தனர். இதனால், அரசு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. உண்மையில் இதை பெருநிறுவனங்கள் விரும்பவில்லை. ஆனால், மக்கள் முழு முயற்சியாக நின்று இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். அரசு நிறுவனம் 12 இடங்களில் துளையிட்டு எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து வந்தது. மொத்தம் 225 கிணறுகள். ஒரு நாளுக்கு 57 ஆயிரம் பேரல்களை நிரப்பி வணிகம் செய்து வந்தனர். இந்த திட்டத்திற்கு இஷ்பிங்கோ – தம்போகோச்சா என்று பெயர். அமேசான் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இத்திட்டத்திற்காக இரண்டு பழங்குடியினங்களை அப்புறப்படுத்தியிருந்தனர். தொடக்கத்தில் இருந்தே எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பாக வந்த எதையும் அரசு பரிசீலிக்கவே இல்லை. எண்ணெய் கிணறு தோண்டி அதை வணிகம் செய்வதிலேயே குறியாக இருந்தது. இதனால்தான், திட்டத்திற்கு எதிர்ப்பாக அதை ந

சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

படம்
  புத்துயிர்ப்பு தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும். மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை தனது

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்ட