இடுகைகள்

பன் பட்டர் ஜாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

படம்
                  அன்புள்ள மெகந்தியா மக்களே! அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வது அவசியம். அப்போதுதான், இந்த ரோதனைக்கு நாமே

வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!

படம்
  அன்புக்குரிய மெகந்தியர்களே,  பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு  ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம். மனேஷ் எப்படி இருக்கீங்க? உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா? என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா? ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறைய

பிற நாட்டினரை காப்பதே நமது முதல் குறிக்கோள்!

படம்
  பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே,  பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்க்க  அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என  சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மறு உலகிற்கு அனுப்ப உறுதிகொண்டுள்ளேன். மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.  எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக இருக்கும்போது டிவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்வதை பார்த்தால் இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.  இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான்  எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளை பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு