இடுகைகள்

சிறை தண்டனை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறை தண்டனையை தவிர்க்க என்ன காரணம்?

படம்
தண்டனையை தவிர்ப்போம்! அமெரிக்காவைச் சேர்ந்த குடியரசு கட்சி உறுப்பினர் சக் கிராஸ்லே, வன்முறையில் ஈடுபடாத குற்றவாளிகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கும் மசோதாவை உருவாக்கியுள்ளார். டெக்சாஸ் மற்றும் மசாசூசெட்ஸ் மாநிலங்களில் சிறை சீர்திருத்தங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. சிறிய தவறுகளுக்கு அதிக ஆண்டுகள் சிறைதண்டனை கொடுக்கப்படுவது அரசுக்கு நிதிப்பிரச்னையையும், குற்றவாளிகள் தீவிர குற்றவாளிகளாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என வாதிடுகிறார் கிராஸ்லே.  குறிப்பிட்ட காலத்திற்கு விலங்குகளை பிணைத்து வைத்து கண்காணித்து தேறுபவர்களை விடுவிக்கலாம் என்பது இவரின் கருத்து. இது குறித்து 2 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் கொள்ளை மற்றும் போதைப்பொருட்களை விற்றவர்களுக்கு சிறைதண்டனை அவசியம் என கூறினர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என கருப்பினத்தவர்கள் மற்றும் வெள்ளையர்கள் இனவேறுபாடின்றி கூறியுள்ளது நாம் கவனிக்கவேண்டிய செய்தி.