இடுகைகள்

அசாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

படம்
  ஸ்லோ டிஸாஸ்டர்  எழுத்தாளர் மிதுல் பருவா அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம். பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை? ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் ப

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல

வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்

படம்
  அசாம் அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.  ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.  எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.  20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.  நன்றி ச.அன்பரசு 3.3.2021

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்த

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி

முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

படம்
              ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன ? அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன . சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை . அடிப்படைக் கட்டமைப்பு , பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது . வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான் . எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும் . எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும் . மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது . இந்துக்களின் வளர்ச்சி 10 தான் அதிகரித்துள்ளது . இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை , வறுமை ஆகியவையே காரணம் . எனவே , நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி , சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும் . மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா ? அரசு , ம

அசாமைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கையாளருக்கு கிடைத்த தேசிய விருது! - பெஞ்சமின் டெய்மேரி

படம்
            அசாமின் பாக்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் டெய்மேரி. இவர் நடித்த ஜோனகி என்ற படம் தேசிய விருதுக்கான ஜூரி பிரிவில் நடிப்புக்கான விருது பெற்றுள்ளது. இச்செய்தியை டெய்மேரிக்கு போன் செய்து, படத்தின் இயக்குநர் பிரகாஷ் தேகா சொல்லும்போது, டெய்மேரியால் நம்ப முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர். அந்த ஆச்சரியத்தை நம்ப முடியாமல் இணையத்தை சோதித்து அதனை உறுதி செய்துகொண்டார்.  மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருது வழங்கப்படுவது 2001ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. ஆனால் டெய்மேரிக்கு நடிப்புக்காக வழங்கப்பட்டதுதான் இதில் சிறப்பானது. அபூர்வா  அஸ்ரானி என்பவருக்கு ஸ்னிப் என்ற படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 2012இல் ஓனிர் இயக்கிய ஐ எம் என்ற படத்திற்கு சிறந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. இந்தப்படம் ஒரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசியது.  இப்படி விருதுகள் வழங்கப்பட்டாலும் அதிகளவில் இவை வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவர் நடித்த அசாமிய படம் இன்னும் வணிகரீதியில் திரையரங்குகளைத் தொடவில்லை. ஆனால் இவர் மும்பையில் தங்கி பல்வேறு ஆடிசன்களுக்கு சென்று வருகிறார். ந

வளர்ச்சியை மட்டும் பேசினால் அசாமில் வெற்றி பெற முடியாது. இன அடையாளத்தை பேச வேண்டியது அவசியம்! - ஹிமான்சு பிஸ்வா சர்மா

படம்
          ஹிமான்சு பிஸ்வா சர்மா அசாம் மாநில அமைச்சர் , பாஜக அசாமின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நீங்கள் . ஆனால் துறை சார்ந்த சாதனைகளை கைவிட்டு இடம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றிய பிரச்னைகளை மட்டுமே பிரசாரத்தில் பேசுகிறீர்களே அது ஏன் ? பிரிவினை காலத்திலிருந்து அசாம் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்து வாழ்பவர்களின் பிரச்னை உள்ளது . லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் , பிமலா பிரசாத் சலிகா ஆகியோர் இப்பிரச்னையைத் தீர்க்க போராடினர் . ஆனாலும் கூட இதற்கு முடிவு கிடைக்ககவில்லை . மேலும் இங்கு முஸலீம்கள் வாழும் பகுதிக்கு சென்றீர்கள் என்றால் அனைத்து அரசு திட்டங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அங்கு வாழும் முஸ்லீம்கள் சொல்லுவார்கள் . ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பார்கள் . நாங்கள் இதனை மாற்ற நினைக்கிறோம் . அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாமிலுள்ள இந்து , முஸ்லீம்கள் , இடம்பெயர்ந்து வந்த முலலீம்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாம் மாநிலத்தில் வெறும்மே வளர்ச்சியை மட்டும் பேசினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது . இங்கு மக்களின் அடையாளம்

சூனியக்காரி என்று தூற்றப்பட்ட பெண்களின் உயிரைக் காப்பாற்றிய அசாதாரணப் பெண்மணி!

படம்
                உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி ! அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா . இவர் 2010 ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார் . ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன . '' இப்போது , அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது . என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது . நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன் . ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான் . அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் '’ என்றார் ராபா . கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா . இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார் . அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை . '' எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான் . ஆனால் இதுபற்றி

புத்தகம் புதுசு! புற்றுநோய் பற்றி முழுமையான அறிவதற்கான நூல்

படம்
              புத்தகம் புதுசு எல்ஜி இன் தி ஈஸ்ட் ! திருபாஜ்ஜியோடி போரா நியோஜி புக்ஸ் ப . 380 ரூ . 595 அசாமில் நடக்கும் பல்வேறு படுகொலைகள் , தீவிரவாதம் பற்றி ஆழமாக பேசுகிறது . ஹவ் ஐ லேர்ன்டு டு அண்டர்ஸ்டாண்ட் தி வேர்ல்டு ஹான்ஸ் ரோஸ்லிங் ஹாசெட் ப . 256 ரூ .599 ரோஸ்லிங் அவருடைய வாழ்க்கை பற்றி எழுதியுள்ள நூல் இது . ஒருவகையில் நினைவுச்சித்திரம் எனலாம் . கடினமான இந்த காலகட்டத்தில் இந்த நூலை வாசிப்பது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் . தி கேன்சர் கோட் ஜேசன் ஃபங் ஹார்ப்பர் கோலின்ஸ் ப . 400 ரூ .499 புற்றுநோய் எப்படிப்பட்டது , அதனை ஏன் குணப்படுத்த முடியவில்லை , அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய ஏராளமான தகவல்களை நூல் சொல்லுகிறது . ஆசிரியர் டாக்டர் என்பதால் நூல் நம்பிக்கைக்குரியதாக மாறுகிறது .