டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

 






இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமா? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது. சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன். மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது. அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது. இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன். மோசமான நிகழ்ச்சி.

40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது. வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது. பலருக்கு மார்பிலும், வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு,101ஆவது இடம் கிடைத்துள்ளது. பாக். இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான். பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல்வது? அங்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு, கேரளத்தில் வந்து வேலை செய்கிறார்கள். காரியக்கார புத்திசாலித்தனம்தான்.

கார்ட்டூன் கதிரவனை அவரது வண்ணாரப்பேட்டை வீட்டுக்குச் சென்று பார்த்தேன். திருமணமானபிறகு அவரது மனைவி அகிலாவையும் இப்போதுதான் பார்க்கிறேன். அகிலா கணவருக்கும் சேர்த்து தடாலடியாக பேசுபவராக இருக்கிறார். அவர்களது மணவாழ்வு மகிழ்ச்சியாக செல்கிறது என நினைக்கிறேன். அரசுத்தேர்வு எழுதி பதவியைப் பெற கதிரவன் முயன்று வருகிறார். நன்றி!

அன்பரசு

17.10.2021

மயிலாப்பூர்

--------------------------------------






காரியக்கார ராஜதந்திரம்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் போனில் பேசியது மகிழ்ச்சி. நான் இப்போது அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு என்னுடைய வலைப்பூவை எழுதிக்கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைப்பதுதான் காரணம். அலுவலகத்திற்கு அருகிலுள்ள டீக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழ் கிடைக்கிறது. இதை கடைக்காரரே வாங்கிப் போடுகிறார். அதைப் பெரும்பாலும் அவரிடம் கேட்டுப் படிப்பதே நான்தான். அவர் மாத்ருபூமி மலையாள நாளிதழை வாங்கிப் படிக்கிறார். விலை ஏழு ரூபாய். மலையாளம் படிக்க பேச அறிந்தவர். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது.

மாலையில் 3 மணிக்கு டீகுடித்தபடி தீக்கதிர் நாளிதழ் படிப்பது வழக்கமாகி விட்டது. டெய்லி புஷ்பம் வெளியில் பத்திரிகை விற்கிறதோ இல்லையோ ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்துக்கொண்டு நாளிதழை வீட்டுக்கு வலுக்கட்டாயமாக போட்டு நிறைய சம்பாதிக்கிறார்கள். இது என்ன வகையான ராஜதந்திரம் என எனக்கு புரியவில்லை. நான் டெய்லி புஷ்பத்தைப் படிப்பதில்லை. பக்கத்து அறை ஐயர் படித்தபிறகு கொண்டு வந்து தருவார். அப்படியே வாங்கி பழைய பேப்பர் கடையில் எடைக்கு போட்டுவிடுவேன்.

ஃபிரன்ட்லைன் இதழில் மோடியின் பிரிவினைவாதம் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து வருகிறேன். நன்றி!

அன்பரசு

10.10.2021

மயிலாப்பூர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்