சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

 

 

Mega Star Chiranjeevi dialogues | Indra

 

 

10 Telugu Movies Which Followed The Plot Of Movie Basha & Went On To ...

 

 Indra Telugu Movie | Bham Bham Bole Full Song | Chiranjeevi, Aarthi ...


சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக்


இந்திரா


இயக்கம் பி கோபால்


கதை சின்னி கிருஷ்ணா


வசனம் பாருச்சி பிரதர்ஸ்


பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி


மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம்


2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான்.

சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆளுநரின் பெண். அந்த உண்மையை மறைத்து சங்கரைக் காதலிக்கிறார். ஆதரவற்ற பெண் போல நடிக்கிறார். சங்கரின் வீட்டிலேயே தங்கி அவரை காதலித்து வசப்படுத்த நினைக்கிறார். தன் மகள் வாரணாசியில் ரயில் நிலையத்தில் நின்றி பயணிகளை ஏற்றி இறக்கும் டாக்சி டிரைவர் என ஆளுநர் அறிந்து ஆக்ரோஷமாகிறார். அவனைக் கொன்றுவிட்டு எனது பெண்ணை மீட்டு வாருங்கள் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறார். இதில் நடக்கும் சிக்கலால், சங்கரின் மாமன் மகள் நந்தினி கடத்தப்படுகிறாள். இறுதியில் ஆளுநர் நேரடியாக சங்கரின் வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் நீங்களா என ஆச்சரியப்படுகிறார். உங்களைத்தான் என் பெண் விரும்புகிறாள் என்றால் திருமணத்தில் எந்த ஆட்சேபமும் இல்லை என சொல்லுகிறார். அப்புறம் என்ன ரத்தசரித்திரத்தைச் சொல்லும் சுழல் சுற்றுகிறது.

தொடக்க காட்சியில் படம் செல்லும் திசையை சொல்லி விடுகிறார்கள். படத்தின் கதை எளிமையானது. பரத் ரெட்டி, வீர சிவா ரெட்டி என ஊரில் உள்ள இரு  சக்தி வாய்ந்த குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் ரத்த சரித்திரம்தான் படம்.

படம் நெடுக வெட்டுக்குத்துதான். இதிலும் இந்திரசேனா ரெட்டி, எதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஸ்னேகலதா ரெட்டியை திருமணம் செய்துகொள்ளும் நேரத்தில் நடக்கும் வன்முறை பீதியூட்டுவது.. திருமணம் என்ற பெயரில் இதற்கு முன்னரே இந்திரன் தனது அப்பாவை சித்தப்பாவை இழந்தவன். இந்த முறை அதே முறையில் அவனது அண்ணன், அண்ணி ஆகியோரை இழக்கிறான். கோபத்தில் தன்னை மறக்கும் இந்திரனுக்கு எதிரிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிய, எதிரி குடும்பத்தினரை வெட்டி சாய்க்கிறான். இதில் ஒருவரின் தலையை இளநீரை சீவுவது போல கத்தியால் வெட்டி வீசுகிறான். மணப்பெண்ணிடம் ஏதும் சொல்லுவதில்லை. அவன் தனது அண்ணன், அண்ணி இறுதி காரியங்களை செய்துவிட்டு குடும்பத்தை கிளம்பிக்கொண்டு இந்த சதிகாரர்களின் சகவாசமே வேண்டாம் என வாரணாசி போய் வாழ்கிறான். இபடி இருக்கும்போது, மீண்டும் தனது மாமன் மகளை எதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன் காதலித்து கருவை வயிற்றில் விதைத்து ஏமாற்றிவிட மீண்டும் இந்திரனாக மாறுவதுதான் கதையின் இறுதிப்பகுதி.

படம் நெடுக்க ரத்தம்தான்.. கடைசி இறுதிப்பகுதியில் ஓரிடத்தில் மட்டும்தான் கொல்வது தவறு என இந்திரன் வசனம் பேசுகிறார். மற்றபடி படம் தொடங்கி இறுதிவரை கெட்டவர்களை கத்தியால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். வேறுவழியே இல்லை என காட்சி ரீதியாகவே சொல்லிவிடுகிறார்கள். இதில் ஆறுதலாக ஒரு காட்சி இஸ்லாமிய அடிப்படை வாதிக்கு காதல் தவறு கிடையாது என சொல்லி அவரை மனமாற்றம் செய்யும் காட்சிதான். புனைவுதான் என்றாலும் இந்த காட்சி பார்க்க நன்றாக இருந்தது.

ஆளுக்கேற்ற நீதி - கத்தியென்றால் கத்தி, அன்பென்றால் அன்பு

கோமாளிமேடை டீம்

2


News18 Telugu - మెగాస్టార్ చిరంజీవి సూపర్ హిట్ చిత్రం 'చూడాలని వుంది ...


Watch Choodalani Vundi on ott streaming online

சூடாலனி உந்தி


கதை - இயக்கம் குணசேகர்


மேற்கு வங்கத்திலும், ஆந்திரத்திலும் நடைபெறும் கதை. மேற்கு வங்கத்தில் கதை நடந்தாலும் அங்கு வாழும் தெலுங்கு குடும்பங்களோடுதான் நட்பு, காதல் என அனைத்துமே நடைபெறுகிறது.

ஆந்திரத்தில் இருந்து கிடாரும் தோல் பையுமாக மெக்கானிக் ராமகிருஷ்ணா மேற்கு வங்கம் வருகிறார். அங்கு வந்து தங்குவதற்கு இடம் தேடி தெலுங்கு ஆட்கள் வாழும் குடியிருப்புக்குள் நுழைகிறான். அங்கு, பத்மாவதி என்ற பெண்ணின் அறையில் தங்குகிறான். எப்படி என கேட்கிறீர்களா? இப்படிக் கேட்டால் படம் எப்படி நகரும். அவர்தான் சௌந்தர்யா. அவளை காதலன் மேற்கு வங்கத்திற்கு காதலின் பெயர் சொல்லி கூட்டி வந்து நகையோடு எஸ்கேப் ஆகிவிடுகிறான். அவள் வேறு வழியில்லாமல் ஏதோதோ சில்லறை வேலைகள் செய்து அறை வாடகை கூட கொடுக்காமல் மானம் மரியாதையோடு ரோஷம் குறையாமல் வாழ்ந்து வருகிறாள்.

ராமகிருஷ்ணா அங்கு கிடார் வைத்து பாட்டு பாடி சினிமாவில் சேர வரவில்லை. அவன் பகலில் அறையில் இருப்பான். இரவில் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு யாரையோ அடையாளம் கேட்டு அறிகிறான். இதை பத்மா பார்த்துவிடுகிறாள். அவள் கேட்டாலும் ராமகிருஷ்ணன் ஏதும் சொல்லுவதில்லை. ஆனாலும் அதற்கான நிர்பந்தமும் வருகிறது. அந்த குடியிருப்பில் வாழ்பவர்களை அடித்து மிரட்டி மாமூல் வாங்கும் மேற்கு வங்க ரவுடிகள் குழு அங்கு வருகிறது. அவர்களை அடித்து முதுகுப்பூணை கழற்றுகிறார் ஆந்திர சரவெடி ராமகிருஷ்ணா. அப்புறம் என தங்களின் ரட்சகன் கிடைத்துவிட்டான் என மக்கள் கொண்டாடித் தீர்க்க ஒரே நாள் இரவில் தாதா வாகிறார். அதாவது அண்ணா..

இந்த நேரத்தில் அடிவாங்கியவர்கள் இன்னொரு வஸ்தாது ஒருவனைக் கூட்டி வருகிறார்கள். அவனைப் பார்த்ததும் ராமகிருஷ்ணா உக்கிரமாகிறான். அவனைத் துரத்திச் செல்கிறார். ஆனால் பிடிக்கமுடியவில்லை. பிறகு நடக்கும் சண்டை ஒன்றில் ராமகிருஷ்ணா துரத்திச்சென்றவன், நைச்சியமாக வாளை எடுத்து வந்து ராமனின் வயிற்றில் சொருகிவிட்டு செல்கிறான். இதனால் மயங்கி விழும் ராமகிருஷ்ணாவின் நினைவு பின்னோக்கி போக, அதேதான் ஃபிளாஷ்பேக் வருகிறது.

விஜயவாடாவில் டாக்டர் போல தன்னை நினைத்துக்கொண்டு கார் மெக்கானிக்காக இருப்பவன்தான் ராமகிருஷ்ணா. ஒருநாள் தன் அம்மாவை கூட்டிவர ரயில் நிலையம் போகிறான். அங்கு ஜன்னலில் அழகான பெண்ணைப் பார்க்கிறான். வேறுயார் ஆங்கில நடிகையான பிரியா தான். (அஞ்சலா ஜாவேரி தான்). ராமகிருஷ்ணா, லோக்கல் போட்டோ ஸ்டூடியோவில் வயதுக்கு வந்ததுக்கு கன்னத்தை முட்டுக்கொடுத்து போட்டோ எடுப்போமே அப்படியெல்லாம் போஸ் கொடுத்து அந்த பெண்ணைப் பார்க்கிறார். அந்த பெண் உடனே ஆகா பலியாடு கிடைத்துவிட்டது என அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வந்துவிடுகிறாள். ராமகிருஷ்ணாவின் அம்மா, தனியாகவே தனது மகனைத் தேடி காணாமல் அவனது மெக்கானிக் ஷெட்டிற்கு வந்துவிடுகிறாள். கதை அதல்ல. அஞ்சலாவும் ராமகிருஷ்ணாவும் காட்டுக்குள் ஒன்றாக வாழ்ந்து குழந்தை ஒன்றை பெற்று ஆதார் கார்டு கூட இல்லாமல் வாழ்க்கை நடத்துகிறார்கள். இதை பிரியாவின் அப்பா கண்டுபிடித்துவிடுகிறார்.

அவரைப் பொறுத்தவரை குடும்பத்தை முழுக்க வணிகமயப்படுத்தவேண்டும். மகளைக் கூட இன்னொரு தொழிலதிபர் போர்வையில் உள்ள டான் ஒருவருக்கு கல்யாணம் செய்துகொடுக்க நினைக்கிறார். அதற்கு பிரியா மறுக்க, அவளை கொல்லவேண்டும் அல்லது உயிரோடு இருந்தால் நான் சொன்னதை கேட்கவேண்டும் என அப்பா அடம் பிடிக்கிறார். இதனால் ஏற்படும் தபிடி திபிடியில் பிரியா இறந்துபோகிறார். மகனுக்கு பேச்சு வராமல் போகிறது. ராமகிருஷ்ணாவை போலீஸ் பிடித்து லாக்கப்பில் வைத்து அடிபிரித்து எடுக்கிறது. மகனையும் பிரியாவின் அப்பா, அதாவது அப்பிச்சி எடுத்துக்கொண்டு போய் குட்டி டானாக வளர்க்க நினைக்கிறார். அதை தடுத்து தனது மகனை மீட்டு பத்மாவோடு சந்தோஷமாக குடியும் குடித்தனமுமாக ராமகிருஷ்ணா வாழ்ந்தார என்பதுதான் படம்..

படத்தில் குழந்தைகளுக்கான அனிமேஷன் பாட்டு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது. ராணி சிலக்கம்மா பாடல் மணிசர்மாவின் இசையில் அசத்தலாக இருக்கிறது.

படத்தில் மாஸ் என்பதை விட தேர்ந்த நடிகராக இருக்க சிரஞ்சீவி முயன்றிருக்கிறார்.அதில் நிறைய இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வில்லன் பிரகாஷ்ராஜ். பயமும், கிறுக்குத்தனமும் கொண்ட மனிதராக என்ன யோசிப்பார் என யாரும் கண்டுபிடிக்காதபடி நடித்திருக்கிறார்.

மகனே வாழ்வின் அர்த்தம்

கோமாளிமேடை டீம் 

 

 

 

3



https://i.ytimg.com/vi/WO7QHwmAw2A/maxresdefault.jpg

ரிக்‌ஷாவோடு


சிரஞ்சீவி, நக்மா, சௌந்தர்யா


சேரி பகுதியில் தனது பாட்டியோடு வந்து வாழ்பவன், ராஜா. அங்கு இருப்பவர்களுடன் சேர்ந்து எளித்தாக கோலாவில் மதுபோல கலந்து வாழ்கிறான். ரிக்‌ஷா ஓட்டுவதுதான் வேலை. ரிக்‌ஷாவை வாடகைக்கு கொடுப்பவர் சௌந்தர்யா. பார்த்த சில நிமிடங்களில் ராஜாவை சௌந்தர்யாவுக்குப் பிடித்துப்போக, படம் நெடுக நக்மாவுக்ககுப் பிறகான பாடல்கள் அனைத்தும் சௌந்தர்யாவுக்குத்தான்.

பாடல், காதல் என ட்ராக் மாறிவிட்டோம். படம் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். எதற்கு கதையெல்லாம்.. ராஜா ரிக்‌ஷா ஓட்டுவதோடு மீதி நேரமெல்லாம் தனது அடிபொடிகளோடு சேர்ந்து குடிப்பது, கோழி, மீன் என வைத்து மணக்க தின்பது என வாழ்கிறார். இந்த சூழலில் நாயகி வரவில்லையே என நினைக்கும்போது நக்மா வருகிறார். இவர் வேகமாக கார் ஓட்டி ரிக்‌ஷாவை மோதி சாய்க்க, அதன் பங்கு பாகங்கள் பிய்ந்து தனித்தனியாக வந்துவிடுகிறது. இதற்கு 3 ஆயிரம் பணம் கேட்கப்போய், வழக்கு நீதிமன்றம் போய் வழக்கில் ராஜா தோற்றுப்போய்.. இப்படி போய்க்கொண்டே இருக்கிறது காட்சிகள். நக்மா படம் நெடுக வில்லியாகவே வருகிறார். கல்யாணம் செய்து ராஜாவை ஏமாற்றுகிறான் என கிரியேட்டிவாக திட்டம் போடுகிறார். அதை அவளது அரசியல்வாதி அப்பா பயன்படுத்திக்கொள்கிறார். அப்போதுதான் ராஜாவின் பாட்டி முக்கியமான நினைவை கண்டுபிடிக்கிறாள். அது, ராஜாவின் அப்பா, அம்மாவின் வாழ்க்கையை அழித்தவன் அந்த நகரத்தில் வாழ்கிறான் என்பது. நாம் அறிந்த விஷயத்தை அவள் அறியும்போது அந்த மோசமான ஆளின் பெண்ணை ராஜா முதல்வர் முன்னிலையில் திருமணமே செய்துவிடுகிறான்.

இதற்கிடையில் பாட்டி மரணப்படுகையில் அவனது அம்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள் என தகவலைச் சொல்லிவிட்டு உயிர் விடுகிறாள். அப்புறம் என்ன? பிளாஷ்பேக்கை தொடங்க வேண்டியதுதானே? அந்த பிளாஷ்பேக்கை சொல்லுவதற்கு ஆள் வேண்டுமே அதுதான் சிறையில் உள்ள ராஜாவின் அம்மா ஜெயசுதா இருக்கிறாரே.... அவர் ஏன் சிறைக்கு சென்றார், முந்தைய ஆண்டுகளில் என்ன நடந்து என்பதை ராஜா அறிந்துகொள்கிறார். அவர் எப்படி தனது பழிவாங்கலை செய்தார், அப்பாவை மானபங்க குற்றவாளி, அம்மாவை விபச்சாரி என ஊரே சொல்லும்படி என்ன ஆனது என்பதுதான் பின் கதை.

கதை தொடகத்தில் இருந்து பாதி வரை ஜாலியாக செல்கிறது., பாட்டு, சாப்பாடு, நடனம், பிறருக்கு உதவுவது என ராஜா பாத்திரத்தில் அசத்துகிறார் சிரஞ்சீவி....இவருக்கு ஈடுகொடுத்து நடித்து பல பாடல்களை பாடி ஆடி திருமணம் செய்யமுடியாமல் தோழியாகவே நின்றுவிடுகிறார் சௌந்தர்யா.

ஊருக்கே அத்தனை நன்மை செய்தவருக்கு சிலை வைத்துவிட்டு அவரது மனைவியை விபச்சாரி என ஊர் மக்கள் பேசுவது நம்புவதாக இல்லை. இத்தனைக்கும் ஊர் தொழிலாளர்கள் முன்னிலையில் கீழே தவறி விழவிருந்த மனைவியை கீழ்சாதிக்காரன் பிடித்து காப்பாற்றினான் என்பதற்கான அவன் கையை வெட்ட முயல்பவன் எப்படிப்பட்ட காவாலித்தனமான ஆளாக இருப்பான்... அதைக்கூட மக்கள் அறியாமல் இருப்பார்களா என்ன?

ஊரில் நடைபெறும் திருமணங்களுக்காக தாலிக்கு தங்கம் தந்தே வறுமைக்குள் வரும் ராஜாவின் அப்பாவை ஊர் மக்கள் எந்தளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது காட்சி ரீதியாக விளக்கப்படவில்லை. வில்லன் தனது மனைவியை ராஜாவின் அப்பா மானபங்கப்படுத்தினார் என ஊர் பொதுமக்கள் சொன்னவனை எப்படி போலீசார் நம்புகிறார்கள் என தெரியவில்லை. இப்படி தன் வீட்டில் வாழும் பெண்ணின் மானத்தை விட்டுக்கொடுத்து எதிரியை பழிவாங்குபவன் எப்படி வெல்ல முடியும். ஆனால் நாயகனை புனிதராக்க இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள்.  கடைசி காட்சிகள் எல்லாம் டிவி சீரியல் மாதிரி ஆகிவிட்டது.

புனித நிரூபணம்

கோமாளிமேடை டீம்












 



 

கருத்துகள்