மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

 கோப்ரா


இயக்குநர் அஜய் ஞானமுத்து


இசை ஏ ஆர் ஆர்ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை. 


மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம். 


விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான். 


ஆனால் படத்தில் ஆர்வம் தரும் மற்ற விஷயங்கள் பெரிதாக உதவவில்லை. மதி கதிர் யார் என்பதை வித்தியாசப்படுத்த ஒரே விஷயம்தான் இருக்கிறது. அது கண்ணாடி. நீளமான முடியுடன் கண்ணாடி அணிந்தவன், கதிர். கணக்கு நிபுணன். தனது மனநல குறைபாட்டையும் தாண்டி கொலை செய்தாவது பிறருக்கு உதவ நினைக்கிறான். அதையும் செய்கிறான். தான் செய்யும் செயலுக்கான பின்விளைவுகளையும் அறிந்தே இருக்கிறான். இப்போது சொன்ன அத்தனைக்கும் எதிர்மறையான பாத்திரம் மதியழகன் உடையது. இவன் கணினி வல்லுநன். ஆனால் சுயநலவாதி. சிறுவயதில் இருந்தே அண்ணனை பைத்தியம் என வெறுத்து வருகிறான். 


படத்தின் அடிப்படை இருவரின் பாச நேச வெறுப்புதான். 


இதற்கிடையில் தான் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கோப்ரா ஆராய்ச்சியும், அதைக் கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரி அஸ்லான் இந்தியா வருவதும் நடைபெறுகிறது. அஸ்லானாக இர்பான் பதான், படத்தில் அவருக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. நாயகிகளுக்கும் அதே நிலைமைதான். பிறருக்கு உதவி செய்தே மதி பெயரில் உள்ள கதிரவனை கவர்கிறாள் கல்லூரி ஆசிரியையான ஷெட்டி. உண்மையில் கதிரவன், தன் மனதிற்குள்ளாகவே பல்வேறு பாத்திரங்களை உருவாக்கி பேசிக்கொண்டிருப்பதால், அவனுக்கு தனியாக வாழ்க்கை, காதலி என்பதெல்லாம் தேவைப்படுவதில்லை. ஆனால் அவன் மனதிற்குள் உள்ள சிறுவன் மதி சொல்லும் பேச்சைக் கேட்டு தன்னை காதலிக்கும் பாவனாவைத் திருமணம் செய்துகொள்ள செல்கிறான். பிறகு நடக்கும் திருப்புமுனை சம்பவங்கள்தான் கதிரவனின் வாழ்க்கையை முடித்து வைக்கிறது. 


நல்ல குணங்களும், கருணையும் இருந்தால் ஒருவனால் உலகில் வாழ்ந்துவிட முடியுமா என்ன?


படத்தில் அடிப்படையான கதையும், இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. ஆனால் திரைக்கதை ஒருகட்டத்தில் அலைபாய்கிறது. இதனால் கதை மீதான கவனம் குலைந்து  போகிறது. 


கதை நன்றாக இருந்தால் படம் ஐந்து மணிநேரமாக இருந்தால் கூட பார்க்கலாம். இந்த வகையில் மார்ட்டின் ஸ்கார்ஸி படங்கள் சற்று நீளமானவைதான். படத்தின் தயாரிப்பாளரே உள்ளே புகுந்து வெட்டி தியேட்டருக்கு ஏற்றமாதிரி மாற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். எனவே, கதை தான் முக்கியம். நீளம் முக்கியமல்ல. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை