உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்பாரனாய்ட் என்பதை, 

மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும். 


அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள். 


பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இதைப்பற்றி எழுதுவார்கள். தனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் கூறுவார்கள். உலகில் 2.5 சதவீத மக்களுக்கு பாரனாய்ட் குறைபாடு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. பொதுவாக ஸசோபெரெனியா பாதிப்பு ஏற்பட்டவர்களின் குடும்பங்களில் பாரனாய்ட் குறைபாடு எளிதாக உருவாகிறது. 


பாரனாய்ட் வந்தவர்கள் அதிகாரத்தின் மீது பதவி மீது பேராசை கொண்டவர்கள். இவர்கள் பிறரோடு இணைந்து கூட்டுறவாக வேலை செய்வது நடக்காத ஒன்று. பிறரைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதையே யோசிப்பார்கள். அதையே சாத்தியப்படுத்த சாம,பேத. தண்ட முறையில் முயல்வார்கள். இந்த மனப்பான்மை இருப்பவர்களுக்கு காதல், திருமண உறவு கடினம். திருமண உறவு வரும்போது அதில் இவர்கள் இணையரை எப்போதும் சந்தேகப்படுவார்கள். நம்ப மாட்டார்கள். ஆக்ரோஷமாக சண்டை போட்டு மோசமான மொழியைப் பேசி இணையரை காயப்படுத்துவார்கள். 


பாரனாய்ட் குறைபாட்டிற்கு சைக்கோதெரபி உள்ளது. குறைந்தபட்சம் இதை பெற நோயாளியை தயார்படுத்தினால் அவர்களை சமூகத்தில் வாழ வைக்க வழியுண்டு. இதையும் அவர்கள் தீவிரமாக சந்தேகப்படத் தொடங்கினால் மருந்துகளை சாப்பிடமாட்டார்கள். பிறகு நிலைமை கவலைக்குரியதாக மாறும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை