அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!
செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...