இடுகைகள்

கிருதி காரந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டுபிடிப்பாளர் விருது பெற்ற இந்தியப்பெண்

படம்
செய்தி: இந்தியாவைச் சேர்ந்த சூழல் உயிரியலாளரான டாக்டர் கிரித்தி காரந்த், இந்த ஆண்டிற்கான  பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு(Women of Discovery) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விங்க்ஸ் வேர்ல்ட் க்வெஸ்ட்(WINGS WorldQuest ) என்ற நிறுவனம் வழங்கும் பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இரண்டாவது இந்தியப்பெண் டாக்டர் கிரித்தி காரந்த். வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண் கண்டுபிடிப்பாளர் விருது டாக்டர் கிரித்திக்கு வழங்கப்படவிருக்கிறது. களப்பணியில் சாதனை கர்நாடகத்தின் மங்களூருவில் பிறந்த கிரித்தி கார்ந்த் வைல்டுசேவ்(Wildseve) என்ற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கி சூழலியல் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். வன மக்களுக்கு மறுகுடியமர்வை உறுதிப்படுத்திய சாதனைக்குத்தான் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பத்ரா வனப்பகுதியிலுள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுகுடியமர்த்தல் பணிகளையும், அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் பணிகளை  அர்ப்பணிப்பாக செய்து சாதித்திருக்கிறார் கிரித்தி காரந்த். ”வைல்டுசேவ் திட்டத்தைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பே வனப்பாத