இடுகைகள்

ஆனந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீலப்பட நடிகையின் சுயசரிதை- நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் நீலப்படம் நாவல் லஷ்மி சரவணக்குமார் அமேசான்.காம்   இந்த நாவலில் நீலப்பட நடிகையான ஆனந்தி தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறாள். அவள் தனது வாழ்க்கையில் சந்திக்கிற மனிதர்கள் அவளை எப்படி மாற்றுகிறார்கள், சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை, எழுத்தாளர் ல ச கு விவரித்து எழுதியிருக்கிறார். ல ச குவின் பிற நாவல்களைப் போலவே இதிலும் வலி நிறைந்த பால்ய வாழ்க்கை நீக்கமற உள்ளது. ஆனந்தி, விலைமாதுவின் மகள். அவளது தாய் காரணமாக, ஆனந்தி எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை படிக்கும்போது நமக்கு ஏற்படும் வேதனை உணர்வு அளவில்லாத ஒன்று.   நீலப்பட நடிகை என்றாலும் கூட பொதுவான சமூகத்தில் நடிகையின் உடல் எப்படி ஆண், பெண் மனங்களை ஈர்க்கிறது. அதேசமயம் சங்கடப்படுத்தும்படியாகவும் மாறுகிறது. மனதில் உருவாகும் காமத்தின் வரம்புதான் என்ன, ஒரு பெண்ணை ஆண் ஏன் உடலாக மட்டும் பார்க்கிறான், அப்படி பார்ப்பவன் மனதில் உருவாகியுள்ள எண்ணம் என்ன என நிறைய கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ல ச கு.   இதன் காரணமாகவே, நீலப்படம் நாவல் முக்கியமான படைப்பாகிறது