இடுகைகள்

தூய நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!

படம்
வலதுபுறம் சுமன்த்ரா ரே இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல. இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன? ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச