இடுகைகள்

காட்டுவிலங்குகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காட்டு விலங்குகளை வேட்டையாடி வரும் செல்லப்பிராணிகள்! - காட்டுயிர் காணாமல் போகும் அவலம்

படம்
                    காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்ப