இடுகைகள்

குருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காப்பீடு பணத்திற்காக கொலை செய்யும் ஜெகஜ்ஜால குற்றவாளி! - குருப்பு - ஸ்ரீநாத் ராஜேந்திரன்

படம்
  குருப்பு மலையாளம் துல்கர் சல்மான் பணத்திற்காக ஆசைப்படும் ஒருவனின் குற்றத்தடங்களைப் பற்றிய விவரிப்புதான் மையக்கதை.  கேரளத்தில் நடைபெற்ற முக்கியமான கொலைக்குற்றத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நடந்த சம்பவத்திற்கு வருத்தப்படவேண்டுமா என்பதை தொடர்புடையவர்கள்தான் சொல்லவேண்டும். படத்தில் நாயகன் தனது திறமையைப் பயன்படுத்தி குற்றங்களின் உச்சிக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருக்க படம் நிறைவடைகிறது.  கோபாலகிருஷ்ணன் என்பவரைப் பற்றி அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் படம் கேரளத்தில் தொடங்குகிறது. அப்படியே கோபாலகிருஷ்ணன் பற்றி நோக்கி நகர்கிறது. பிறரை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டி வைப்பதில் ஆர்வம் கொண்டவன், விமானப் படைப் பிரிவில் பயிற்சிக்கு செல்கிறான். ஆனால் அவனது பணம் சம்பாதிக்கும் வேகத்திற்கு விமானப்படை பயிற்சியும் வேலையும் கசப்பாக இருக்கிறது. அங்குதான் பீட்டர் என்ற நண்பன் கிடைக்கிறான். அவனுக்கும் வெளியில் உள்ள அழகைக் காட்டுகிறான். ஆனால் தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை மறந்தும் கூட சொல்வதில்லை.  கோபாலகிருஷ்ணன் யார் என அவனது நண்பர்கள், மனைவி, சுற்றம் என பலரும் பல்வேறு கருத்துகள