இடுகைகள்

ஆப்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள்!

படம்
    கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள் கூகுள் புதுமையாக பல்வேறு சேவைகளை தொடங்கினாலும் பின்னாளில் அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாதபோது யோசிக்காமல் அதனை நிறுத்திவிடும். அதுபோல நின்றுபோன பல்வேறு சேவைகளை இப்போது பார்ப்போம். கூகுள் ஹேங்அவுட் 2013-2020 கூகுள் ஒரே மாதிரியான பல்வேறு சேவைகளை தொடங்குவதும் பின்னர் என்ன செய்வதென தெரியாமல் அதனை நிறுத்துவதும் புதிய வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் ஆலோ என்ற செய்தி சேவையை முதலில் நிறுத்தியது. பின்னர் ஹேங்அவுட் கிளாசிக் சேவையை தேவையில்லை என நிறுத்தியது. இத்தனைக்கும் இந்த ஆப்பை பல கோடிப்பேர் தங்களின் போன்களில் பயன்படுத்தி வந்தனர. இதற்கு பதிலாக கூகுள் மீட், அல்லது சாட் வசதியை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் இதுவும் வசதிகள் போதவில்லை என தோன்றினால் வாட்ஸ்அப் பக்கம் சென்றுவிடலாம். கூகுள் பிளே மியூசிக் 2011-2020 அனைத்து ஆண்ட்ராய்டுகளிலும் வேலை செய்கிறதோ இல்லையோ அப்டேட் கேட்கும் ஆப் இதுதான். ஆனால் இப்போது இந்த ஆப் யூடியூப் மியூசிக் ஆப் வந்துவிட்டலாம் மூடப்பட்டு விட்டது. இதனை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

டெக் டிரெண்ட்ஸ் - சூரியக்குளியல் போடவும் டைம் ஷெட்யூல் போட்டுக்கொள்ளலாம்

படம்
      cc         டெக் டிரெண்ட்ஸ் பயணம் புதிது! தெலுங்கில் பாலைய்யா கூட ப்ளூடூத் சூட்கேஸைப் படத்தில் பயன்படுத்திவிட்டார். இதைப்பற்றி வேறு நாம் என்ன சொல்ல? அழகிய மேல்தட்டு யுவதிகள் பவனிவரும் வெஸ்பா பைக்கை உருவாக்கி இத்தாலிய கம்பெனியான பியாஜியோ அவர்களுக்கு ஏற்றாற்போல சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஏர்போர்ட் போனால் கூட அங்கிருக்கும் அடையாளங்களை புரிந்துகொண்டு உங்கள் பின்னால் செல்ல  நாய்க்குட்டி போல கூடவே வரும். சூரிய குளியல் போடுவது நல்லதுதான். ஆனால் புற ஊதாக்கதிர்கள் பாதித்தால் திராவிட நிறம் திகைக்கவைக்கும் நிறமாகிவிடும் ஆபத்து உண்டு. எனவே இதற்காக லோரியல் ஒரு சென்சாரை உருவாக்கியுள்ளது. இதனை நகத்தில் பொருத்திக்கொண்டு சொம்பை உருட்டி விட்டது போல சிரித்துக்கொண்டு கடலில் சன் பாத் எடுக்கலாம். வெளியிலின் அளவு அதிகமாகிவிட்டால், உடனே சென்சார் போனுக்கு தகவல் அனுப்பி, அலர்ட் கொடுத்து எந்திரிங்க மேடம் என்று செய்தி சொல்லுமாம். தோலில் பட்டாலே வெயில் கடுமையாக இருக்குதுன்னு தெரியுமே? ன்னு விவரமாக கேள்விகள் கேட்டு கமெண்ட் அடித்தாலும் அதை நாங்கள் காம்ளிமெண்டாகவே எடுத்துக்கொள்வோம். ஸ்மார்ட்போனில்

மனநலனைக் காக்கும் மொபைல் ஆப்ஸ்கள்!

படம்
பிபிசி பெருந்தொற்று காலத்தில் உடல்நலனைப் பாதுகாக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. மனநலன் பாதிப்பு உடனே வெளியே தெரியாவிட்டாலும் நமது இயல்பு, பழகும் முறை என அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அதனை ஓரளவு சீர் செய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவை உதவும். இவற்றை தொடர்ச்சியாக செய்வதில்தான் பிரச்னை உள்ளது. அவற்றை நினைவுபடுத்தவும் ஏராளமான ஆப்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். Calm இந்த ஆப் தினசரி நீங்கள் இனிய இசையோடு தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு உதவுகிறது. இதற்கான இசையை நீங்கள் இதில் உள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். தூங்குவதற்கான நேரத்தையும் இந்த ஆப் கண்காணிக்கிறது. இனிய இசையைத் தேர்ந்தெடுத்து அதனை போஸ் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு நீங்கள் தூங்கலாம். காசு கொடுத்து அப்டேட் செய்தால் நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும். headspace முன்னாள் புத்த மத துறவியான ஆன்டி புத்திகாம்ப் என்பவர் இந்த ஆப்பின் துணை நிறுவனர் இதுவும் காம் என்ற மேற்சொன்ன ஆப் போலத்தான செயல்படுகிறது. தியானமும், தூக்கமும் இதன் முக்கியமான அம்சங்கள். குறிப்பிட்ட மனநிலை சார்ந்த இச

உங்கள் லைஃப்ஸ்டைலை மாற்றும் ஆப்கள்!

படம்
லைஃப்ஸ்டைல் ஆப்ஸ்! பாக்கெட் கோச் தினசரி நீங்கள் மெசேஜ் அனுப்பும் பிற ஆப்களைப் போலவே இருக்கும். ஆனால் இதில் பல்வேறு டிப்ஸ்களை உங்களுக்கு மெசேஜ் போலவே தருகிறார்கள். இதில் உங்களுக்கு விரக்தி, மனச்சோர்வு இருந்தால் சரிசெய்ய உதவுகிறார்கள். டெசர்ட் ஐலேண்ட் இது ஒரு சர்வே போலத்தான். நீங்கள் எந்த ஆப்பை எத்தனை முறை ஆன் செய்து என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து டைம்ஸ் ஆப் இந்தியா போல சார்ட் போட்டு விளக்குகிறார்கள். இதிலிருந்து நமக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பை அடையாளம் காணலாம். ஸ்மைலிங் மைண்ட் தியானம் செய்வதும் இன்று டிஜிட்டலாகி விட்டது. இந்த ஆப்பில் அதனைப் பார்ப்பதோடு அதிகாலையில் எழுந்து செய்தால் உங்கள் உடல்நலமும், மனநலமும் தேறுவதற்கு வாய்ப்புள்ளது. மூட்ஃப்ளோ உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆப் இது. இதில் மனநிலை பற்றிய அறிக்கையைப் பெற்றால் உங்களது மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஸ்டஃப் இதழ்

ஸ்மார்ட்போனைக் கண்காணிப்போம். - சூப்பர் ஆப்ஸ்

படம்
அன்லாக் கிளாக் எத்தனை முறை போனை திறக்கிறீர்கள், கைரேகை, முகமறியும் வசதியை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள், பின்கோடை எத்துனை முறை அழுத்துகிறீர்கள் என அத்தனையும் பதிவு செய்து உங்கள் அடிமைத்தனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆப் இது. அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்ளாது என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம். இதனை உங்கள் போன் ஸ்க்ரீன் வால்பேப்பர் போல வைத்துக்கொண்டு எத்தனை முறை போனை திறக்கிறீர்கள் என்று கூட சோதித்துக்கொள்ள முடியும். ஆப்பை திறக்கும் நேரம் மிச்சம்தானே? ஜியோமி பயனர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். நேரவிரயம். மார்ப் உங்கள் போனில் ஸ்பாட்டிஃபை முதற்கொண்டு கருப்பு குரோம் ஜிலுஜிலு படங்கள் வரை பல ரகசியங்களை வைத்திருப்பீர்கள். இதற்கான ஆப்களை ஒழுங்குமுறைப்படுத்தினால்தானே நல்லது? அதற்குத்தான் இந்த மார்ப் ஆப் உதவுகிறது. மேலேயுள்ள ஆப்பும், மார்ப் ஆப்பும் கூட கூகுளின் தயாரிப்பே. வேலை, விளையாட்டு, இணைய ரேடியோ என தலைப்பிட்டு ஆப்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஸ்பேஸ் இதுவும் அன்லாக் கிளாக் போன்ற வேலைகளைச் செய்கிறது. நீங்கள் போனில் செலவிடும் நேரத்தை வரையறை செய்துகொள்ள இந்த ஆப்பை நாடல

கூகுள் 2019 - சிறந்த ஆப்ஸ்கள் இதோ!

படம்
மீஸோ ஆப் 2019ஆம் ஆண்டு இறுதியில் உள்ளோம். இந்த நேரத்தில் அறுபது ஆப்ஸ்களுக்கு மேல் நம் போனில் வைத்திருப்போம். அதில் உருப்படியான ஆப்ஸ் உண்டா என ஆராய வேண்டிய நேரம் இது. கூகுள் தன்னுடைய கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில.... அப்லோ - ablo இந்த ஆப் எதிர் பதிப்பக மொழிபெயர்ப்பாளர் போல கொடுத்ததை அப்படியே மொழிபெயர்க்கிறது. இதன் விளைவு என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களோடு கூட நீங்கள் சம்சாரிக்க, எழுத, அவர்கள் சொன்ன கல்வெட்டு வாக்கியங்களை படிக்க முடியும். அத்தனைக்குமான விஷயங்களை இந்த ஆப்பே செய்கிறது. Boosted இந்த ஆப் ஆபீஸ் நேரத்தில் ஒழுங்காக வேலை பார்க்கிறீர்களா என்று உங்களுக்கு சொல்லும். இதனால் கவனம் சிதறி இமெயில் செக் செய்து, சினிமா விகடன் தளத்திலேயே குடியிருக்கும் ஆட்கள் தம் தவறை எளிதாக உணர்ந்து திருந்த முடியும். வருஷக்கடைசி இல்லையா, இதையே புத்தாண்டு சபதமாக எழுதிக்கூட வைத்துக்கொள்ளலாம். Ok credit இது பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளுக்கானது. வரவு செலவு ஆகியவற்றை இதில் சேம

வாவ் சொல்ல வைக்கும் ஆப்ஸ்கள் - 2019

படம்
ஸ்பெக்ட்ரா கேமரா இது ஐபோனுக்கான ஆப். அழுக்கான சூழலிலும் பளிச்சென புகைப்படம் எடுக்க உதவும் ஆப். ட்ரைபாட் இல்லாமல் சிறப்பான ஷேக்கிங் இல்லாத படங்களை எடுக்கலாம். மேலும் எந்த கூட்டத்திலும் உங்களுக்கு தேவையான ஆட்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் ஏ.ஐ நுட்ப வசதி இந்த ஆப்பில் உண்டு. அதனால்தான் ஆப்பிள், இந்த ஆப்பிற்கு ஆப் ஆப் தி இயர் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. மூன்று பௌண்டுகள் கொடுத்துத்தான் இதை நீங்கள் வாங்க வேண்டும். அஃபினிட்டி பப்ளிசர் அடோப் இன்டிசைனுக்கு நிகரான வேறு ஆப்களை தேடுகிறீர்களா? உங்களுக்காகத்தான இந்த ஆப் உதவுகிறது. ஏராளமான டூல்கள் உண்டு. உங்களுக்கு புத்தகங்களை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டா, சந்தேகமே வேண்டாம் உடனே இதனை காசு கொடுத்து வாங்கி பின்னி எடுங்கள். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிற்கும் விருது வழங்கி பாராட்டியுள்ளது. விலை - 48 பௌண்டுகள் ஜம்போ இலவச ஆப்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் கிடக்கும் குப்பைகளை நித்ய கர்மவாசியாக சுத்தம் செய்கிறது. தேவையில்லாத விளம்பரங்கள், உங்களை பின்தொடரும் ஆப்களை துடைத்தெறிய ஜம்போ உங்களுக்கு உதவும். புரோ

சீனியர்களுக்கான டேட்டிங் ஆப்ஸ்! - காலம் கடந்துபோன 50 பிளஸ்!

படம்
giphy.com காதல் யாருக்குத்தான் வராது? ஆனால் அப்போதுதான் நாம் பிசியான கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டு இருப்போம். காதல் அப்படியே காற்றில் கற்பூரமாக கரைந்துபோயிருக்கும். அப்புறம்  ஜி. சுரேந்தர்நாத் எழுதிய விகடன் கதையைப் போல, நினைத்துப் பார்த்து படித்துப்பார்த்து கண்ணீர் சிந்த வேண்டியதுதான். இன்று மளிகைக்கடை முதல் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. அப்புறம் என்ன காதலையும் தள்ளு தள்ளு என்று தள்ளி இணையத்தில் ஏற்ற வேண்டியதுதானே.. ஏற்றி விட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் சீனியர்களுக்கானது. ஆம் 50 பிளஸ் ஆட்களுக்கான ஆப்கள் இது. இதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்து பேசலாம். மணம் செய்யலாம். அதற்குப்பிறகு கிடைக்கும் சாத்தியங்களைப் பொறுத்து ஏதாவது முயற்சிக்கலாம். ஆப்களை பார்த்துவிடுவோமா? லூமன் - LUMEN இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லி லெஸ்டர் என்பவர் உருவாக்கிய ஆப் இது. 2018இல் ஆழ்ந்து யோசித்து லூமன் என்ற ஆப்பை உருவாக்கினார். FINALLY ஜெர்மன்கார ர்கள் இயந்திரங்களை மட்டும்தான் செய்வார்களா? காதலையும் செய்வார்கள் என்பதற்கு இந்த ஆப் சாட்சி. ஜாமோ என்பவர் 2017இல் இந்த ஆப்ப

விளையாட்டுகளுக்கான ஆப்ஸ்! - சக்கர வியூகம் வகுக்கும் ஆப்ஸ்!

படம்
டாக்டிகல் பேட் என்பிஏ ஏஆர் பேஸ்கட் பால் பேஸ்கட் பால் விளையாட்டை மெய்நிகர் உலகில் விளையாடினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த ஆப்பின் விசேசம். இதோடு இன்னும் நிறைய விளையாட்டுகள் உள்ளன. இன்ஸ்டால் பண்ணி இன்பமாக விளையாடுங்கள். நைக் டிரெய்னிங் கிளப் நைக் கம்பெனியின் உடற்பயிற்சி வல்லுநர்கள் உங்களுக்கு வழிகாட்டி ஆரோக்கியத்தை வழங்குகிறார்கள். அதாவது உடற்பயிற்சிக்கான டிப்ஸ்களை. இதில் விளையாட்டுகளில் புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோரும் உண்டு. டாக்டிகல் பேட் கால்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கான சக்கர வியூகங்களை இதன் மூலம் வகுக்கலாம். கௌரவர்களை நாசூக்காக தந்திரமாக வீழ்த்தி ஆரவாரம் செய்யலாம். அதற்கான்ன அத்தனை அம்சங்களையும் இந்த ஆப் கொண்டிருக்கிறது.