நாய்கள் அடிமை அல்ல சக உயிர் என உரக்கச்சொல்லும் கட்டுரைகள் - பின்தொடரும் பிரம்மம்
பின்தொடரும் பிரம்மம் ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே நாய்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமான தொடர்பை, அன்பை பகிர்பவை. இந்த கட்டுரைகள் வழியாக அவர் வளர்த்த நாய்கள், அவற்றை அவர் பெற்றது, அதன் வழியாக கிடைத்த அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. இதில் நவீன் என்ற அவரது நண்பரது நாய் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நாய்களை வளர்ப்பது பற்றிய அன்பையும் அக்கறையையும் நூல் வழியாக பெற முடியும். பல்வேறு கட்டுரைகளிலும் நாயை எப்படி வளர்ப்பது, பழக்க வழக்கங்களை மாற்றுவது, கனிவோடு நடத்துவது ஆகியவற்றைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நாயை துன்புறுத்துபவர்களை அக இருள் வன்முறையாளர் என கூறுகிறார். நாயின் பழக்கவழக்கங்களை அடித்து திருத்த முடியாது என சில சம்பவங்கள் வழியாக விளக்குகிறார். அவர் தனது வீட்டில் டாபர்மேன், லாப்ரடார் என இரு இன நாய்களை வளர்க்கிறார். பின்னாளில் பயணிக்கும் பிரச்னைகள் எழவே நாய் வளர்ப்பதை கைவிடுகிறார். நாய் வளர்ப்பது, பசுவை வளர்த்து பால் பெறுவது போன்றதல்ல. அது ஆத்மாவின் தேவைக்கானது என கூறுகிறார். கறுத்தம்மா என்ற காட்டில் வாழும் வேட்டையாடி உண்ணும...