தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!
அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கான்கஷன் என்றால் என்ன? தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம். தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும். முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும். சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும் எப்போதும் உடலில் களைப்பு இருக்கும். மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும் பழக்கம் மாறும் மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும். வாந்தி வருவது போல தோன்றும் கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும். ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும் வாசனை, சுவையறியும் திறன் இழப்பு காதில் ஓலி கேட்கத் தொடங்கும் இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா? ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் ...