அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

 

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!


இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம். ஸ்மார்ட்போன், கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம். அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும். ஒருமுறை மேம்படுத்திவிட்டால், டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம். ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் .


கூகுள், ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில், சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை, பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது. உதாரணமாக 2017இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது. அக்டோபர் 2020ஆம் ஆண்டு, விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை, 2023ல் பயன்படுத்தமுடியாது. இதற்கு நிறுவனங்கள் தரப்பில், தொழில்நுட்பம் மாறுவதால், பாதுகாப்புக்காக புதிய சாதனங்களை வாங்குவது அவசியம் என்பார்கள்.


ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில், ஆப்பிள் நிறுவனம் அதிக காலத்திற்கு மேம்படுத்துதல் சலுகையை வழங்குவதில்லை. எஸ்இ, 3 வகை வாட்ச்களை ஆப்பிள் 6 க்கு கூடுதலாக மாடல்களில் மட்டும்தான் பயன்படுத்தமுடியும். பொதுவாக இயக்கமுறைமையைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் சாதனங்கள் என்றால் ஸ்மார்ட்போன்களைக் கூடுதலான காலத்திற்கு பயன்படுத்தலாம்.. இன்று இணைய இணைப்பில்லாமல் இயங்காத பல்வேறு செயலிகள், மென்பொருட்களை செயல்படுத்துபவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியை மறந்திருக்கமுடியாது. மைக்ரோசாப்ட் வெளியிட்ட பல்வேறு இயக்குமுறைமைகளில் எக்ஸ்பி, பிரபலமானது. இதற்கான பாதுகாப்பு உதவிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது.


எளிமையான எக்ஸ்பி இயக்கமுறைமையுடன் வரும் பல்வேறு மென்பொருட்களை இன்றும் பயன்படுத்தி வருபவர்கள் உண்டு. மென்பொருட்கள் மட்டுமன்றி, ஆரோக்கியத்தை அளவிடும் கருவிகளும் கூட(fitbit) சில ஆண்டுகளிலேயே பயன்படுத்தமுடியாத சூழல் உள்ளது. ப்ளூடூத் போன்ற வசதிகளை பழைய சாதனங்களில் பயன்படுத்தமுடியாது.


தொழில்நுட்ப மாற்றம் என்றாலும் முழு சாதனங்களையும் மாற்றாமல் இருப்பது மக்களுக்கும் பொருளாதாரப் பயன் அளிக்கும். இந்த வகையில் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் மாற்றிப் பயன்படுத்தும் மாடுலர் சாதனங்கள் இதற்கு உதவும். கூகுள், மோட்டோரோலா, எசென்ஷியல் ஆகிய நிறுவனங்கள் மாடுலர் சாதனங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன. ஆனால் இச்சாதனங்கள் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


பழைய டிஜிட்டல் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது சூழலுக்கு ஏற்றது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாகங்களை மாற்றிக் கொள்ளும்படியான மாடுலர் சாதனங்களை நிறுவனங்கள் தயாரிப்பது அவசியம். அப்போது மட்டுமே மேம்படுத்துதல் பிரச்னை தீரும்.


தகவல்

theconversation


https://theconversation.com/upgrade-rage-why-you-may-have-to-buy-a-new-device-whether-you-want-to-or-not-153105

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்