இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

 










இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம். 

இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை விவேகானந்தருக்கு கடிதம் எழுதி தெரிவித்தார் டாடா. 

டாடாவின் முடிவை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றவர் பாட்ஷா. புர்ஜோர்ஜி பாட்ஷா. இவர் மேற்கு நாடுகளுக்கு சென்று அங்கு பல்கலைக்கழகங்கள் இயங்குவதை கவனித்தார். அதன் நடைமுறைகளை தெரிந்துகொண்டார். ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் படையெடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தனர். இப்படி படித்த மாணவர்கள் முக்கியமான இடங்களில் வேலைக்கு சேர்ந்து நன்றாக சம்பாதித்தனர். இதற்கு காரணம், மேற்கத்திய பல்கலையில் படித்தால், கல்விக்கான பெரிய மதிப்பு இருக்கிறது என்பதை பாட்ஷா விரைவில் புரிந்துகொண்டார். 

விரைவில் இந்திய அறிவியல் கழகத்திற்கான வரைவை தயாரித்து டாடாவிடம் கொடுத்தார் பாட்ஷா. அதனை பெங்களூருவில் அமைப்பதென முடிவானது. காரணம், அங்கு சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் இப்படி முடிவெடுத்தனர். 1898ஆம் ஆண்டு டிச.31 அன்று, கமிட்டி கொடுத்த வரைவை ஆங்கிலேயே அதிகாரி கர்சன் பரிசீலித்தார். இன்று அறிவியல் கழகம் நானூறு ஏக்கர்களுக்கு மேலான இடத்தில் செயல்பட்டு வருகிறது. 

371 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ கிருஷ்ணராஜா உடையார் - 4 என்பவர் வழங்கினார்.  வைசிராய் மிண்டோ முறையான அரசு அனுமதியை கொடுத்தார்.  கழகத்தின் செயல்பாடு 1909ஆம் ஆண்டு மே 27 அன்று தொடங்கியது. 

1911ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று இந்திய அறிவியல் கழகத்தில் முதல் பேட்ச் மாணவர்கள் படிக்க சேர்க்கப்பட்டனர்.  பொது மற்றும் அப்ளைடு கெமிஸ்ட்ரி என்ற பாடப்பிரிவு மாணவர்கள் ஆவர். இதற்கு நார்மன் ரூடோல்ப் என்பவர் தலைமை தாங்கினார். எலக்ட்ரோ டெக்னாலஜி பிரிவை ஆல்பிரட் ரே தலைமை ஏற்று நடத்தினார். 

தொடக்கத்தில் இந்திய அறிவியல் கழகம் பல்வேறு ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி உலகளவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது. மைசூர் திவானான சர் விஸ்வேசரய்யா, 1913ஆம் ஆண்டு கழகத்தின் கௌன்சில் உறுப்பினரானார். இவருக்கு மைசூரை தொழில்நகராக மாற்றவேண்டுமென்ற கனவு இருந்தது. 

இவர் உள்ளே வந்தபிறகு ஐந்து தொழிற்சாலைகள் அங்கு உருவாக்கப்பட்டன. சோப்பு, சந்தன தொழிற்சாலை, மூங்கிலிருந்து போர்டுகளை உருவாக்கும் தொடங்கப்பட்டது.  சந்தன சோப், எண்ணெய் ஆகியவை அன்றே வெற்றி பெற்றன. மைசூர் சாண்டல் சோப் யாருக்கேனும் நினைவுக்கு வருகிறதா இது அரசு நிறுவனத்தின் தயாரிப்புதான். 

1940ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகப்போர் -2 முடிவுற்றபிறகு பல்வேறு பொறியியல் தொடர்பான துறைகள் இந்திய அறிவியல் கழகத்தில் தொடங்கப்பட்டன. வேறு கல்வி கழகங்களை உருவாக்கும் திட்டங்களும் இங்கேதான் உருவாக்கப்பட்டன. 

உலகப்போர் -2 வின்போது பல்வேறு வீர ர்களுக்கு பயிற்சி, ராணுவ ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றன.  இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனமும் இதில் இணைந்தது. இங்கிலாந்து, அமெரிக்க விமானங்களின் பழுது பார்க்கும் பணிகள் இங்கு நடைபெற்றது. இப்பணிகளுக்கு பிறகுதான் இங்கு ஏரோநாட்டிகல் பிரிவும் தொடங்கப்பட்டது. 

1950, 60 காலகட்டத்தில் சதீஸ் தவான் என்பவர் இங்கு தலைவராக இருந்தார். இவரின் வழிகாட்டுதலில் கணினி அறிவியல், தானியங்கி அமைப்பு ஆகியவை சிறப்பான வளர்ச்சி பெற்றன. சூழல், தட்பவெப்பநிலை, கடல் அறிவியல் தொடர்பான பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டன. 

இங்கு உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் அஸ்த்ரா என்ற பிரிவின் கீழ் கிராமப் பகுதியில் பயன்படுத்தப்பட்டன. இந்த அமைப்பு, இப்போது சூழலுக்கான தொழில்நுட்பமாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்திய அறிவியல் கழகத்தின் முதல் இயக்குநர் எம் டபிள்யூ டிராவர்ஸ். இவர் சர் வில்லியம் ராம்சேவின் உதவியாளராக இருந்தவர். இதற்கு பிறகு சர் ஏஜி போர்னே, சர் மார்ட்டின் ஓ ஃபாஸ்டர், சர் சிவி ராமன் ஆகியோர் இங்கு இயக்குநர்களாக பதவியேற்று சாதித்தனர். 

ஹோமி ஜே பாபா, விக்ரம் சாராபாய், அன்னா மணி, கமலா சோஹோனி, சிஎன்ஆர் ராவ் ஆகியோர் இங்கு படித்து பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக மாறிய மாணவர்கள். 

இந்திய அறிவியல் கழகம் உருவாகிய பிறகே, ஐஐடி மற்றும் இஸ்ரோ, பார்க் ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 

மெல்லிய எடையில் போர்விமானங்களை உருவாக்கியவர் பேராசிரியர் ரோடம் நரசிம்மா. இதன் பெயர்தான் தேஜா. கடவுள் துகள்களை கண்டுபிடிக்கு இன்று பல்வேறு மலைகளை துளையிட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதை கண்டறிந்தவர் பேராசிரியர் ரோகினி காட்போலே. கடவுள் துகளை ஹிக்ஸ்போசான் என்று அழைப்பார்கள். 

இன்று இந்திய அறிவியல் கழகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. நான்கு ஆண்டு பிஎஸ்சி பாடங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். புதிய பொருட்களை ஆராய்ச்சி செய்ய பல்வேறு தொழில் நிறுவனங்களோடு தொடர்புகொண்டுள்ளது அறிவியல் கழகம். 

சமூகத்திற்கு உதவும் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கவும் இந்திய அறிவியல் கழகத்தில் தனி துறை உள்ளது. இதனை சிட் என அழைக்கின்றனர். இவற்றில் சில நிறுவனங்கள் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை வென்றுள்ளன. 

டைம்ஸ் ஆப் இந்தியா

சேட்டன் குமார் 



 



 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்