வாசனையை அறியமுடியாத குறைபாடு! - டேட்டா ஜங்க்ஷன்

 









அனோஸ்மியா

ஆங்கில திரைப்படத்தின் பெயரை கூறவில்லை. இது ஒரு குறைபாடு. இந்த குறைபாடு வந்தவர்களுக்கு மணம் தெரியாது. வாழ்க்கை முழுக்க வாசனையை, துர்நாற்றத்தை எதையும் இவர்களால் உணர முடியாது.இதற்கு காப்பீடு கூட கிடைப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில்  பலருக்கும் நோய் வந்ததன் முதல் அறிகுறியாக மணத்து முகரும் தன்மை காணாமல் போயிருக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள். 

வாசனையை முகரும் ரிசெப்டர்கள் மனிதர்களுக்கு 6 மில்லியன் உண்டு. நாய்களுக்கு 300 மில்லியன் உண்டு. 

ஒரு டிரில்லியன் வரையிலான வாசனைகளை மனிதர்களால்  அறிய முடியும். 

3.2 சதவீத அமெரிக்கர்களுக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது. 

உலக மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது. 

கொரோனா பாதிப்பில் பத்து சதவீத பேருக்கு அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கியிருக்கிறது. 

பார்க்கின்சன், நீரிழிவு நோய், புற்றுநோய் காரணமாகவும் ஒருவருக்கு அனோஸ்மியா தோன்றலாம். மூக்கில் உள்ளே வரும் காற்றுதான், என்ன வாசனை என்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது. காற்று ஊடகத்தின் வழியாக நோய்க்கிருமிகள் பரவுவதால் முதலில் தாக்கப்படுவது வாசனை உணரும் திறன்தான். 

மேற்சொன்ன பல்வேறு நோய்கள் காரணமாக ஒருவருக்கு குறிப்பிட்ட காலம், நிரந்தரமாக அனோஸ்மியா ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குறைபாடு பார்த்தால் பெரிய குறைபாடு என்றே தோன்றாது. ஆனால் உணவின் வாசம் ஒருவருக்கு தெரியாதபோது, அவரால் சரியாக சாப்பிட முடியாது. மேலும் அவரின் பாலுறவும் கூட இணையின் உடல் வாசம் தெரியாதபோது சிறந்த அனுபவத்தை இழக்கிறார். குழந்தைகளின் இருப்பையும் அவர்களால் கண்ணால் பார்த்தால் உணரலாமே தவிர, உடல் வாசனையை உணர முடியாது. 

இது உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

க்வார்ட்ஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்