2021 முக்கியமான டேட்டாக்கள்!
டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் பாராலிம்பிக்ஸிலும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 முதல் 19 ஆகும். இதுதான் இந்தியாவில் ஆல்டைம் அதிக எண்ணிக்கை கூட.
இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. பத்தாண்டுகளில் இதுவே அதிக அளவு ஆகும்.
இலங்கை பாடகியான யோகானி தனது மணிகே மகே பாடலுக்கு 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளார். இலங்கை பாடகருக்கு இதுவே அதிகபட்ச பார்வையாகும்.
கடந்த செப் - ஜூலையில் 50 சதவீத எஸ்யூவி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப்பிறகுதான் செடான், ஹாட்ச்பேக் கார்கள் எல்லாம். தலைவன் எஸ்யூவிதான். பயணிகள் அதிகம் பயணிப்பதற்கான வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது.
ஸ்டேன்சாமி. கிறிஸ்தவர் என்பதால் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் குற்றுயிராக ஆக்கப்பட்டவர். 84 வயதில் அவரை ஒன்றிய அரசு சிறைவைத்து சித்திரவதை செய்து கொன்றது. இந்த வயதில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான வேதனையான பெருமை ஸ்டேன்சாமிக்கே சொந்தம்.
இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற பெருமையை இடதுசாரி அரசு கேரளத்தில் பெற்றுள்ளது. அங்கு எப்போதும் காங்கிரஸ், இடதுசாரி என லெப்ட், ரைட், லெப்ட் என்றே மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் இம்முறை மனம் மாறிவிட்டார்கள்.
146 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் விலை ரூ.100க்கும் அதிகமாக உள்ளது. தலைநகரிலேயே இந்த நிலைமைதான். அப்புறம் கேரளம், கர்நாடகம், சென்னை எல்லாம் கேட்கவா வேண்டும்? எல்லாமே மீட்டருக்கு மேலேதான் சூடு......
அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்பட்டு இந்தியா வளர்ச்சிப்பாதையில் நடைபோட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2 கோடிக்கு வாங்கிய நிலத்தை பத்தே நிமிடங்களில் 18.5 கோடிக்கு விற்று சாதனை செய்துள்ளனர் வியாபாரிகள். அயோத்தியா டிரஸ்ட்டுக்குத்தான் இந்த பிஸினஸை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள், எடுத்துக்கொண்ட இடைவெளி 19 ஆண்டுகளும் பத்து மாதங்களும். இந்த இடைவெளியில் ஆயுதங்களை வாங்கி குவித்து அங்கிள் சாம் நாட்டையே ஓட வைத்துள்ளனர்.
டாடா உருவாக்கி ஏர் இந்தியா மீண்டும் அவருக்கே பல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி விற்றிருக்கிறார்கள். இதற்கு 68 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு இடையில் ஆன்மிக இன்பமாக நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பக்தாஸின் எண்ணிக்கை 70 லட்சமாகும்.
பசி பட்டினி பட்டியலில் இந்தியாவின் இடம் 101.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிறையில் கழித்த நாட்கள் 22.
ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் டாலர்களை பைசர் பயோன்டெக், மாடர்னா நிறுவனங்கள் சம்பாதித்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா
அதுல் தாக்கூர்
கருத்துகள்
கருத்துரையிடுக