வாசனை முகரும் திறன் - சில சுவாரசியங்கள்
கோவிட் வந்தபிறகு ஒருவருக்கு வாசனை உணரும் திறன் போய்விட்டாலே அருகிலிருப்பவர் உடனே அலுவலகத்தில் மனிதவளத்துறை மேலாளருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு மாநகராட்சி வார் ரூமுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்.அந்தளவு மரணபயத்தை கோவிட் -19 ஏற்படுத்திவிட்டது.
யாராவது இருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட அவர் பாக்கெட்டில் கையைவிட்டு ஸ்ரீ ராம் மெடிக்கலில் போய் டாபர் ஹனிடசை வாங்கி வந்து கொடுத்து கூட காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவு பாழும் பயம் மனதை பாடாகப் படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் சரி, நாம் இங்கு வாசிக்கப்போவது வாசனை பற்றி மட்டும்தான்.
கோவிட் -19 வந்தவர்களை கண்டுபிடிக்க காய்ச்சலை சோதிப்பது கூட ஒருகட்டத்தில் குறைந்துபோய் வாசனை சோதனைகளை செய்திருக்கின்றனர். அதுவும் அறிகுறிகளில் ஒன்றுதானே என்பதுதான் காரணம். நோய்த்தாக்கம் குறைந்தபிறகு வாசனைகளை முகரும் திறன் மெல்ல இயல்புக்கு மீண்டு வந்திருக்கிறது.
வயதாகும்போது இயல்பாகவே வாசனைகளை முகரும், இனம் கண்டுபிடிப்பது குறைந்துவிடும். செல்கள் அழியத் தொடங்குகிறது அல்லவா? அதனால்தான்.
வாசனை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பது குறைந்து வந்தால் அதனால என்னப்பா என சாதாரணமாக இருந்துவிடாதீர். அல்சீமர், சீசோபெரேனியா, ஆட்டோஇம்யூன் வகை நோய்கள், குறிப்பாக லூபஸ் என்ற நோயாக கூட இருக்கலாம்.
வாசனை உணரும் சென்சார்கள் மூக்கின் நடுப்பகுதியில் உள்ளன. அவை மூளையோடு தொடர்புடையன. பார்க்கின்சன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனையை உணரும் திறன் இருக்காது. உடலின் மோட்டார் இயக்கங்கள் பார்க்கின்சன் பாதிப்புகள் தொடர்பாக ஏற்படும். அதற்கு முன்பே வாசனை உணரும் திறன் பாதிக்கப்படும். இதனை முன்னமே அடையாளம் கண்டால் சிகிச்சை எடுத்து பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.
ஒருவருக்கு பசிக்கும்போது மூக்கு பரபரப்பாக நம்மைச்சுற்றி என்னென்ன வாசனை வீசுகிறது என கண்காணிக்கும். வாசனைகளை அறிவதற்கும் அதனை ஊக்கப்படுத்த சில பயிற்சிகளை முயன்றால் போதும். புகைப்பிடிப்பது வாசனை முகரும் திறனை பாதிக்கும். எனவே அதனை கைவிடுவது இதற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உடலுக்கு நல்லது.
உணரும் வாசனைகளில் எதுவும் நல்லது கெட்டது என்று கிடையாது. இதனை மூளைதான் நமக்கு சொல்லுகிறது. இதனை எம்ஆர்ஐ சோதனையில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிடிஎஸ்டி பாதிப்பு கொண்டவர்களை தூண்டிவிட்டு நினைவுகளை நினைவுகூரச்செய்து அதை மறக்க வைக்க வாசனைகளை பயன்படுத்துகிறார்கள்.
கர்ப்பிணிகள் அக்காலகட்டத்தில் பிறரை விட நுணுக்கமான வாசனை முகரும் திறன்களைக் கொண்டிருப்பார்கள். இது எதற்கு? அப்போதுதான் நச்சு உணவுகளை அவர்கள் சாப்பிடாமல் தவிர்க்க முடியும். அதேசமயம் மன அழுத்தம் உடலின் பல்வேறு திறன்களை குறைத்து விடும்.
ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஆசியா டிச.2021
கருத்துகள்
கருத்துரையிடுக