கருணை மனுக்கள் மூலம் சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் கெஞ்சியது சங்கடமானது! - டாக்டர் வினய் லால், வரலாற்றுத்துறை பேராசிரியர்

 


டாக்டர் வினய் லால்







டாக்டர் வினய் லால்

இவர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி, இன்ட்ரோடியூசிங் ஹிஸ்டரி, தி அதர் இண்டியன்ஸ் எ பொலிட்டிகல் அண்ட் கல்ச்சுரல் ஹிஸ்டரி ஆப் சவுத் ஆசியன்ஸ் இன் அமெரிக்கா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அவரிடம் இந்திய அரசியல் நிலை, வரலாறு பற்றி பேசினோம். 

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுத காந்திதான் பரிந்துரைத்தார் என ராணுவ அமைச்சர ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார். இது உண்மையா? இந்துத்துவ தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக போராடினார்களா? இதில் உங்கள் கருத்து என்ன?

சாவர்க்கரின் நூல்களைப் படித்து விட்ட ராணுவ அமைச்சருக்கு முன்னரே பலரும் காந்திதான் கருணை மனுவுக்கு மனு செய்ய உதவினார் என்று கூறி வந்தனர். ஆனால் இது ஆதாரமே இல்லாத அப்பட்டமான பொய். இதில் பல்வேறு புனைவுகளும் வதந்திகளும்தான் உள்ளன. ஏஜி நூரானி எழுதிய சாவர்க்கர் அண்ட் இந்துத்துவா தி கோட்ஸே கனெக்ஷன் (2002) என்ற நூலில் சாவர்க்கர் எழுதிய கருணை மனுக்களை ஒருவர் எளிதாக அடையாளம் கண்டு வாசிக்க முடியும். அதில் சாவர்க்கர் பரிதாபகரமான முறையில் பிரிட்டிஷ்காரர்களைக் கெஞ்சி தன்னை விடுவிக்குமாறு கோரியிருப்பார். அதை படிப்பதே சற்று சங்கடமானது. 

1911ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய கருணை மனு நூலில் இல்லை. 1913 மற்றும் அதற்குப் பிறகு எழுதிய மனுக்கள் கிடைக்கின்றன. 

அதில் அரசு எனக்கு கருணை கூர்ந்து விடுதலை வழங்கினால்  அவர்களுக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன். நீங்கள் என்னை விடுதலை செய்தால், தவறாக வழிகாட்டப்பட்டு வரும் இளைஞர்களை வழிகாட்டு உங்களுக்கு ஆதரவான வழியில் நடக்க வைப்பேன். இதனால் உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்கும். அரசுக்கு எந்த வழியிலும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கருணை மனுவில் எழுதியிருப்பார்.  

காந்தியைப் பொறுத்தவரை அவர் நிறைய முறை சிறையில் இருந்துள்ளார். ஆனால் எப்போதும் என்னை விடுவியுங்கள் என்று அவர் கருணை மனு எழுதியதில்லை. அவரை விடுங்கள். காந்தியையும் அவரது கருத்துகளையும் எதிர்த்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் கூட சிறையில் இருந்தபோது கருணை மனு எழுத விரும்பவில்லை. பகத்சிங்கின் அப்பா, உனக்கு இளம் வயது. வாழ்க்கை உள்ளது. கருணை மனு எழுதினால் ஆங்கிலேயர் உன்னை விடுவித்து விடுவார்கள் என்று கூறியபோது, அவரை பகத் கடுமையாக கடிந்துகொள்கிறார். 

இவர்களோடு ஒப்பிடுகையில் சாவர்க்கர் டஜன் கணக்கில் கருணை மனுக்களை ஆங்கிலேயருக்கு அனுப்பி விடுதலை அளிக்க கெஞ்சி வந்த ஆளுமைதான். காந்தி, சாவர்க்கருக்கு கருணை மனு எழுத பரிந்துரைத்தாரா என்றால் அதற்கான சம்பவங்களை பார்ப்போம். 

1920ஆம் ஆண்டு சாவர்க்கரின் இளைய சகோதரர், தனது அண்ணனை சிறையிலிருந்து மீட்க ஆங்கிலேயரிடம் பரிந்துரை கேட்கிறார். ஆனால் காந்தி அவர் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் தான் தலையிட முடியாது என்று கூறிவிடுகிறார். காந்தியின் தொகுப்பு நூல் 19இல் இதற்கான கடிதம் காணக்கிடைக்கிறது. அவர் சாவர்க்கரின் தம்பிக்கு லாகூரிலிருந்து பதில் எழுதி அனுப்பி இருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக அவர் சிறையில் இருப்பதால், அதனை மக்கள் கவனத்திற்கு கொண்டு முயற்சி செய்யலாம் என்று மட்டுமே அவர் கூறினார். 

1920ஆம் ஆண்டு காந்தி யங் இந்தியாவில் எழுதிய கட்டுரையில் சாவர்க்கர் சகோதரர்கள் என்ற தலைப்பில், அவர் வேறு குற்றங்களுக்காக சிறையில் இல்லை. அரசியல் குற்றங்களுக்காகவே சிறையில் இருப்பதால் அவரை மீட்பது கடினம் என எழுதியிருக்கிறார். கூடுதலாக சாவர்க்கர் அவர் சார்ந்த இயக்கமும் புரட்சிகரமான சிந்தனைகளை கொண்டது அல்ல. அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவே இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு அவர்கள் உதவ விரும்பவில்லை. ஆங்கிலேயருடன் இணைந்து இருப்பதே இந்தியாவின் விதி என அவர்கள் நினைத்தனர் என எழுதியிருக்கிறார். 

ஆர்எஸ்எஸ் அமைப்பும் ,இந்து மகாசபாவும் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக ஆங்கிலேயருக்கு விசுவாசமாகவே செயல்பட்டு வந்தனர். இன்று சாவர்க்கரை நாயகர்களாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. அவர் இந்திய சுதந்திரத்திற்கு அணுவளவும் உதவவில்லை. 

இந்தியாவின் பிரிவினைக்கான சிந்தனை முத்தை உருவாக்கியதே சாவர்க்கர்தான். பின்னாளில் இதற்கு ஜின்னா காரணம் என தேசபக்தி கூட்டம் உருட்டியது. இதைப் பற்றி அம்பேத்கர்  தாட்ஸ் ஆன் பாகிஸ்தான் 1940 என்ற நூலில் எழுதியிருக்கிறார். ஜின்னாவும் சாவர்க்கரும் அனைத்து விஷயங்களிலும் வேறுபட்டவர்கள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்தியா என்பது இரண்டு. ஒன்று இந்துக்களுக்கானது. மற்றொன்று முஸ்லீம்களுக்கானது என்று எழுதினார். 

அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒரே மாதிரியான கல்வித்திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறதே?

நான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன். நான் முழுமையாக அதைப் பற்றி தெரியவில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இந்தியாவின் வரலாறை ஊட்டமேற்றப் போகிறார்கள். அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் என்று ஒன்று உருவாக்கப்பட்டால் அது கல்வியில் பேரழிவாகவே இருக்கும். அதற்கும் மேல் சுதந்திர சிந்தனை என்பதே இருக்காது. 

ஆங்கிலேயரின் அடிமை ஆட்சி முறையிலிருந்து கஷ்டப்பட்டு வெளியே வந்து இதுபோல ஒரு முட்டாள் தனமாக சுயராஜ்யத்தில் எதற்கு சிக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு அதுவே பரவாயில்லை என்று சொல்லலாம். ஒரேமாதிரியான கல்வித்திட்டம் என்பது ரோபாட்டுகளை உற்பத்தி செய்யவே உதவும். சுதந்திரமான சிந்தனை என்பதே இந்த முறையில் இருக்காது. நான் இளங்கலை பயில்பவர்களுக்கு பாட நூலே கையில் இல்லாமல் பாடங்களை நடத்துவேன். ஏனெனில் வரலாறு தொடர்பான நான் பாடநூல்கள் இல்லாமல் நிறைய கட்டுரைகளை படிப்பவன். பாடநூல் என்பது வரலாறு தொடர்பான நிறைய கட்டுப்பாடுகளை கொண்டது. ஆனால் அறிவு அதற்குள் நின்றுவிடக்கூடாது. 


இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மத்திய கால வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்போதே அதைப்பற்றி பல்வேறு நிறுவனங்கள் பயிற்றுவிப்பதை நிறுத்தி விட்டார்கள். 

இது இன்னும் பிரச்னையான விவகாரம்.  இது உண்மையென்றால், இப்படித்தான் நடக்கிறது என்றால் அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்றே மாணவர்களுக்கு தெரியாது. இது குறிப்பிட்ட முறையில் ஒருவரை சிந்திக்க வைக்கும் முறை. ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்பது இருண்டகாலமாக இருந்தது. அதனை அப்படியே காப்பியடித்து பாஜக கட்சி இந்தியாவில் திணிக்கிறது. இந்தியாவில் மத்திய காலம் என்பது வளர்ச்சிக்கான காலமாகவே இருந்தது. இலக்கியங்கள் வளர்ந்தன. பக்தி இயக்கம் வளர்ச்சி பெற்றது. 1000-1700 எனும் இக்காலகட்டம் இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வடக்கில் துளசிதாசர், சுர்தாஸ், மீராபாய், கபீர், நந்தா தாஸ், துக்காராம், ஏக்நாத், நரசின் மேத்தா, பசவண்ணா ஆகியோர் பிரபலங்களாக மாறினார்கள். 

ஐரோப்பாவில் இருண்ட காலமாக இருந்தால், அது இந்தியாவுக்கு அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள் ஆட்சியில் இருந்ததால் உடனே நாமும் அது இந்தியாவிற்கு இருண்டகாலம் என எளிதான ஐடியாவை தூக்கிப் பிடிக்கவேண்டியதில்லை. இந்திய இஸ்லாமிய தன்மை ஐரோப்பாவை விட இந்தியாவில் சிறப்பாகவே இருந்தது. ஐரோப்பாவில் தொன்மை, மத்திய காலம், நவீனம் என மூன்று பிரிவாகவே வரலாற்றைப் பார்ப்பார்கள். இதற்கு இடையில் தொடர்பு இருக்கவேண்டுமெனவே அவர்கள் எண்ணமாட்டார்கள். நாம் அப்படி யோசிக்க வேண்டியதில்லை. 

பிரன்ட்லைன்

அபிஷ் கே போஸ் 

 




கருத்துகள்