உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

 






கிரண் மஜூம்தார் ஷா




கிரண் மஜூம்தார் ஷா

தொழிலதிபர்

தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம். 

1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார்.

கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ். 

1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார். 

பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் தொடங்கிய பயோகான் நிறுவனம் இந்த என்சைம்களை உருவாக்கி அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அனுப்பிக்கொண்டிருந்தது. இந்தியாவில் இப்படி வேலைகளை தொடங்கிய முதல் நிறுவனம் இதுதான். 

வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் இருபது ஏக்கர் நிலத்தை கிரண் வாங்கினார். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி, பல்வேறு சமூக திட்டங்களுக்கு நல்கையாளராக இருக்கிறார் கிரண். 

பயோடெக்னாலஜியில் செய்த சாதனைகளுக்காக 2005ஆம் ஆண்டு பத்மபூசன் விருது வென்றார். 2014ஆம் ஆண்டு 2014, 2019ஆம்  ஆண்டு அறிவியல் மற்றும் வேதியியல் துறையில் செய்த சாதனைகளுக்காக ஆத்மர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழில் 68ஆவது ஆற்றல் வாய்ந்த பெண்ணாக அடையாளம் காணப்பட்டார். 

டெல் மீ வொய் இதழ் 

 


கருத்துகள்