இடுகைகள்

பாலியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடை செய்யப்பட்ட நூல்களை படித்திருக்கிறீர்களா?

படம்
கீழ்க்காணும் நூல்களை அமெரிக்கன் லைஃப்ரி ஆஃப் காங்கிரஸ், பெற்றோர்கள் படிக்கலாம். குழந்தைகளுக்கு படிக்க பரிந்துரைக்க கூடாது என்று கூறியுள்ளது. அப்படிப்பட்ட சில நூல்களை பார்ப்போம். 'The Absolutely True Diary of a Part-Time Indian' இந்த நூல் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையைப் பேசுகிறது. அவரின் மீது நடத்தப்பட்ட இனவெறி வசைகள், வறுமை, குடிபோதை வாழ்க்கை, வன்முறை, பாலியல் வேட்கை ஆகியவற்றை பேசுகிற இந்த நூல் வெளியானபோது கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அதனாலேயே வெற்றியும் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேசிய புத்தகவிருதும், அடுத்த ஆண்டே சிறந்த இளைஞர் இலக்கிய விருதையும்  வென்று சாதனை படைத்தது. 'The Adventures of Huckleberry Finn' மார்க் ட்வைன் எழுதிய இந்நூல் முன்னணி எழுத்தாளர்களால் மிகச்சிறந்த படைப்பு என்று பேசப்பட்டது. ஆனால் வெளியானபோது இனவெறியை பேசியதால் சர்ச்சைக்குள்ளானது. ஆனாலும் வாசகர்கள் இதனை சரியாகப் புரிந்துகொண்டு அவரின் நய்யாண்டியை அடையாளம் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் 1885ஆம் ஆண்டு வெளியானது. நூலின் சிறப்பு, அமெரிக்கர்கள் தினசரி பேசும் எளிய ஆங்கிலம் கொண்டு உரையாடல்கள் இ