மாட்டிறைச்சியின் வரலாறு! - நூல் விமர்சனம்

 


பீப் - எ குளோபல் ஹிஸ்டரி

லோர்னா பியாட்டி ஃபார்னெல்

கட்டுரை நூல் 


மாட்டிறைச்சி என்பது உலகளவில் பல கோடி மக்கள் உண்ணும் உணவு. மக்களில் அதிகம் எதை பயன்படுத்துகிறார்களோ, அதையே அரசியல்வாதிகள் தங்களுடைய ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தேசியவாத தன்மையில் மாட்டிறைச்சியும் கூட முக்கிய அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நூலில், மாட்டிறைச்சியின் வரலாறு, அதை ஏன் ஃபீப் என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்,இறைச்சியை சமைக்கும் விதம்,இறைச்சியைச் சுற்றிச் சுழலும் அரசியல், கோழி இறைச்சி கடைகள், மாட்டிறைச்சியை வைத்துஎப்படி விளம்பரம்செய்து கல்லா கட்டின என ஏகத்துக்கும் ஏராளமான தகவல்கள் உள்ளன. 


மாட்டிறைச்சி பற்றிய ஓவியங்கள், இலக்கியங்கள் என நிறைய தகவல்களை ஆராய்ச்சி செய்து எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மாட்டிறைச்சி என்பது கால்நடைகள் அதிகம் வளர்க்கும்நாடுகளில் எப்போதுமே இருக்கிற ஒன்று. நியூசிலாந்தில் மாட்டிறைச்சி வளர்ப்பு பற்றி எழுதியுள்ளது சிறப்பானது. பொய்யான போலியான சுயநல அரசியலுக்குள் மாடுகளை இழுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது இந்தியாவில் சாத்தியமாகிறது. உலக நாடுகளில் அப்படி தந்திரங்கள் ஏதும் செய்யப்படவில்லையா என்று தெரியவில்லை. மேல்நாடுகளில் மாட்டின் சிறுநீரைக் குடிப்பதில்லை. பாலைக் குடிக்கிறார்கள். இறைச்சியை வெட்டித் தின்கிறார்கள். 


மாட்டிறைச்சி மக்களுக்கு கொடுக்கும் வலிமை முக்கியமானது. இதை நிறையப் பேர் பேசுவதில்லை. நூல் முழுக்க மாட்டிறைச்சி உணவுகளை எப்படி சமைப்பது என்பதற்கு அதிக கவனம் கொடுத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட உணவுகளின் அழகிய புகைப்படங்களும் உள்ளன. இதைப் பார்த்த ஒருவர் பீப் பிரியாணி சாப்பிடாமல் இருந்தால் அவர் மனவலிமையானவர் என்று தாராளமாக கூறிக்கொள்ளலாம்.


அமெரிக்கா,இங்கிலாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என மாட்டிறைச்சி வணிகத்தில் முக்கிய இடம் வகிக்கும் பல நாடுகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த நூல் பொதுவாக அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கோர்வையாக திரட்டித் தர முயல்கிறது. அரசியல் வரலாற்றை தனியாக பிரித்து பெரிதாக எழுதலாம். 


மாட்டிறைச்சி ஏற்படுத்திய மாற்றங்கள், உணவுக் கலாசாரம் பற்றி நூல் அதிக கவனம் கொள்கிறது. அரசியல் விவகாரங்கள் தனி. ஒரு வகையில் பார்த்தால், மாட்டிறைச்சி என்பது மேலை நாடுகளில் தினசரி வாழ்க்கையில் பஙகு கொண்டதாக இருந்திருக்கிறது. உணவு அவ்வளவுதான். பெரிதாக அதைத் தாண்டி யோசிக்கக ஏதுமில்லை. 


கோமாளிமேடை குழு  


images - pixabay

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!