இடுகைகள்

அரசும் புரட்சியும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு, தொழிலாளர் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நூல்!

படம்
        அரசும் புரட்சியும் புரட்சியாளர் லெனின் தமிழில் ரா கிருஷ்ணய்யா சோவியத் யூனியனை மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக ஆண்ட லெனின் எழுதிய நூல். இந்த நூலை கிருஷ்ணய்யா சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க அரசு என்றால் என்ன, அதன் நோக்கம், யாருக்காக செயல்படுகிறது, அதை தொழிலாளர்கள் எப்படி கைபற்றி மக்களுக்காக இயங்க வைப்பது என நிறைய உதாரணங்களோடு எழுதியுள்ளார். நூலில் கூடுதலாக சந்தர்ப்பவாதிகள் பற்றியும் விரிவாக விமர்சனங்களை எடுத்து வைத்து விவாதித்துள்ளார். நூல் எளிதாக வாசித்து யோசித்து புரிந்துகொள்ளக்கூடியதல்ல. மொத்தம் 570 பக்கங்களைக் கொண்டது. மார்க்சிய தத்துவம் சார்ந்த நூல் என்பதால், நூலை அனைவருக்கும் பொதுவான நூலாக கூற முடியாது. நிதானமாகவே படிக்க முடியும். நூலை வாசிப்பதற்கு முன்னர், அதன் பின்னே உள்ள பல்வேறு சம்பவங்களை படித்துவிட்டு வந்தால் நூலை முழுவதுமாக வாசிக்க எளிதாக இருக்கும். ஏராளமான சம்பவங்களை நூல் சுருக்கமாக கூறிச்செல்வதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. லெனின் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க மார்க்ஸ், எங்கல்சின் பல்வேறு கூற்றுகள், ஏராளமான நூல்களில் ...