இடுகைகள்

சமூக பொறுப்புணர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை நிரூபித்தவர்! - தி பாடி ஷாப் - அனிதா ரோடிக்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அனிதா ரோடிக்     அனிதா , தனது வணிக வெற்றியை விட அதனைப் பெற எந்த வழியில் சென்றார் , எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை பலரும் வியந்து போற்றுகின்றனர் . 2007 ஆம் ஆண்டு அனிதா காலமானார் . வணிகம் சார்ந்து சூழலை பாதிக்காமல் வணிகம் செய்வது பேச்சாக இருந்த காலகட்டத்தில் அதனை செயலாக மாற்றியவர் அனிதா . இவர் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார் . இத்தாலியைச் சேர்ந்த அகதிகளாக இவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறியவர்கள் . இவர்கள் இங்கிலாந்தில் கஃபே நடத்திக் கொண்டிருந்தார்கள் . அனிதாவின் அம்மா , அவரது அப்பாவின் தம்பி ஒருவரையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார் . ஹென்றி என்ற இவர் , சில ஆண்டுகளிலேயே காலமானார் . கல்வி கற்று இஸ்ரேலில் பணிபுரிந்தார் அனிதா . பிறகு , இவரது அம்மா மூலம் கோடன் ரோடிக் என்பவர் அறிமுகமானார் . அனிதாவுக்கும் ரோடிக்கும் பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருக்க சில நாட்களிலேயே அவரது வீட்டில் தங்கி ஒன்றாக வாழத் தொடங்கினார் இவர்களது வாழ்க்கை அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் ஒன்றாகவே கழிந

கர்நாடகத்தை உயர்த்தும் சிறப்பு கல்விப் பயிற்சி!

படம்
கல்விப் பயிற்சி ஆசிரியர்கள் கல்விச்சாதனைக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கல்விப் பயிற்சியை தனியாரும், அரசு நிறுவனங்களும் இணைந்து வழங்கி தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் கனவுகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து வகுப்புகளிலும் கவனமாகப் படித்து தேர்ச்சி பெறுவது மிக முக்கியம்.  துறைசார்ந்த பொதுத்தேர்வுகளில் பங்கேற்றவும் இத்தகுதி அவசியம். கர்நாடகாவிலுள்ள தேவனஹலி, நெலமனகலா நகரங்களில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளனர். பள்ளிகளில் நடுப்பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைத்தான் எஸ்எல்எல்சி மாணவர்கள் பெற்றனர். ஆனால் ஆண்டு இறுதித்தேர்வில் மேற்சொன்ன இருநகரங்களும் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன.  எப்படி?  குறைந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமானநிலை நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சமூகநலத் திட்டத்தின்படி கொடுத்த கல்விப்பயிற்சிதான் இதற்கு காரணம். இப்படி 1,983 மாணவர்களுக்கு சிறப்பு கவ

சட்டம் போட்டால் சமூக பொறுப்புணர்வு கூடுமா?

படம்
mallenbaker.net சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக்கெடு உள்ளது. அவர்கள் செலவிடாத பணம் அரசின் பொருள