சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!
சீனா டிஸ்ட்ரப்டர்ஸ் சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...