இடுகைகள்

ஷேரிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஷேரிங் செய்வோம் மச்சான்ஸ்! - பகிர்தல் பொருளாதாரம்!

படம்
giphy.com பகிர்தல் என்பது எப்போதும் சிறந்த துதான். இன்று பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சிறப்பங்காடி முதற்கொண்டு தேவைப்படும் பொருட்களைத் தவிர பிற பொருட்களை யாரும் வாங்க விரும்பவில்லை. புது பொருட்களை மக்கள் கண்கள் விரியப் பார்க்கிறராகளே தவிர பர்சை எடுத்து பொருட்களை வாங்க விரும்புவதில்லை. இந்த மனநிலை மாற்றம் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. உதாரணத்திற்கு ஆபீஸ் திறக்கிறார் என்றால், தனியாக வாடகைக்கு இடம்பிடிப்பதை விட கோ வொர்க்கிங் முறை எனும் முறையைத்தான் இன்று பலரும் விரும்புகின்றனர். ஆபீசுக்குத் தேவையான கணினிகள், நாற்காலிகள், ஏசி, ஏன் குடைகளைக் கூட வாடகைக்கு வாங்கலாம். இன்று கார் வாங்காமல் ஊபர், ஓலாவில் செல்கிறார்களே அதேபோல்தான். ஃபர்லென்கோ, சிட்டி ஃபர்னிஷ் ஆகிய நிறுவனங்கள் நாற்காலிகளை, மேசை ஆகிய பொருட்களை வாடகைக்கு அளிக்கின்றன. நெஸ்ட் அவே என்ற கம்பெனி, பல்வேறு வீடுகளை வாடகைக்கு அளிக்கிறது. இது அனைவருக்கும் விருப்பமான வழிமுறை என்று கூற முடியாது. முப்பது வயதுக்கு கீழுள்ளவர்கள்தான் இம்முறையை உலகெங்கும் பிரபலப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இவர்களின் சதவீதம் 51%. உலகெங்கு

பகிர்ந்து வாழ்வதே மில்லியனிய லட்சியம்!

படம்
பகிர்ந்து வாழ்வோம் - தப்பே இல்லை! நீங்கள் சொந்தமாக வீடு வைத்திருந்தால் பெருமையாக இருக்கும். ஆனால் அதற்கான பராமரிப்பு என்ற விஷயம் வரும்போதுதான் செலவு தேள் கடித்தாற்போல கடுகடுக்கும். மாருதி காரே வைத்திருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை ஓட்டிப் பார்ப்பது, சர்வீஸ் செய்வது என செலவுகள் இழுக்கும். இப்போது இப்படி யோசியுங்கள். சென்னையில் கட்டி வைத்த வீடுகளில் ஒன்றை வாடகை அல்லது லீசுக்கு பேசி வாடகைக்கு பர்னிச்சர்களை தரும் ஸ்டார்ட்அப்களில் பணம் கட்டி பொருட்களை வாங்கினால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள். மேலும் இதற்கு நமக்கு தேவைப்படுவது தேய்மானச்செலவு மட்டுமே. இன்று வேலை காரணமாக அங்குமிங்கும் ஏரியாவாரியாக அலையும்போது நாம் வாங்கி குவிக்கும் பொருட்கள் பெரும் சுமை. 1980 களில் ஒருவரிடம் என்ன இருக்கும்? நிலம், வீடு, தங்கம், கால்நடை என இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் லேப்டாப், ஹெட்போன், உடைந்த திரை கொண்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். எங்கேனும் செல்வதற்கு சைக்கிளில் செல்வார்கள். வாழ்க்கை சுமை க