இடுகைகள்

ஏஐ புரட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐ புரட்சி என்ன செய்யும்?

படம்
நன்றி: தினமலர் பட்டம் ஏஐ புரட்சிக்கு ரெடியா? செய்தி: அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. Redmondmag.com மனிதவளத்துறை  மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார