இடுகைகள்

காலணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்களின் கால்களுக்கு அகலமான செருப்புகள்- புதிய காலணி அளவீடு பா

படம்
  புதிய காலணி அளவு பா - அவசியம் என்ன? இந்தியாவில் தற்போது செய்யப்படும் காலணிகளின் அளவுக்கு ஐரோப்பிய, இங்கிலாந்து நாட்டு அளவீடுகள்தான் பயன்படுகின்றன. அதை மாற்றும் விதமாக பா - பாரத் என்ற பெயரில் இந்தியர்களின் தனித்துவம் கொண்ட காலணி அளவீடு கொண்டு வரப்படவிருக்கிறது. இதற்காக தேசிய அளவிலான ஆய்வு நடைபெற்றது.  2021-22 என இரண்டு ஆண்டுகளில் 1,01,880 மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள எழுபது இடங்களில் உள்ள மக்களை இதற்காக தேர்ந்தெடுத்தனர். இந்தியர்களின் தோராய காலணி அளவைக் கண்டுபிடிக்க 3டி ஸ்கேனிங் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  ஆண்களுக்கு பதினொரு வயதிலும், பெண்களுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிலும் கால்களின் வளர்ச்சி கூடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 3டி ஸ்கேனர்கள் மூலம் கால் அளவு, அதன் வடிவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களை விட இந்தியர்களின் கால் அகலமாக உள்ளது. மேற்குநாடுகளின் காலணி அளவு, இந்தியர்களுக்கு குறுகலானதாகவே இருந்துள்ளது. இதை மாற்றினால் அவர்களுக்கு கால் அளவை விட சற்று தாராளமான செருப்புகள்