இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!
இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...