இடுகைகள்

கவிஞர் அறிவுமதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி

 திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி காங்கேயத்திற்கு அதிகாலையில் தனியார் பேருந்தைப் பிடித்து சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் துள்ளிசை பாடல்களைப் போடும் ஓட்டுநர், அன்று பொழுது விடியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பாடல்கள் ஆன்மிகத்தில் முழுகியிருந்தன. ஷண்முகா ஷண்முகா என புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர். அடுத்து பாடியவரும், முருகன் பாடலையே பாடினார். அப்போது என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஒருவரிடம் உதவி கோரிப்பெற சென்று கொண்டிருந்தேன். அங்கு உதவி கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு.  மனக்கலக்கமடைந்த நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடல் தொடங்கியது. அப்பாடலைக் கேட்க கேட்க மனதிலுள்ள கலக்க எண்ணங்கள் குறைந்தது. அந்தப் பாடலின் வரிகளைக் கவனிக்க தொடங்கினான். முருகனுக்கு எண்ணற்ற மனக்கோயில்கள் உண்டு, அதில் அன்புக்கோ பஞ்சமில்லை என பெண் குரல் பாடியது. நிதானமாக குரலை உயர்த்தாமல் பாடியவிதம்தான் முக்கியமானது.  அந்தப் பாடலை எழுதியவர் இதை எப்படியான மனநிலை...