இடுகைகள்

ரிச்சர்ட் ராமிரெஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுர குலம் - ரிச்சர்டு ராமிரெஸ்

இரவில் பாய்ந்த கரும்புலி! 1980களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பலரின் தூக்கத்தை ஒருவர் கெடுத்துக்கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்கும் கனவுக்கண்ணன் அல்ல. கொலைகாரர். அவரின் குறி, பெரும்பாலும் ஆன்டிகள்தான். மத்திய வயதிலுள்ளவர்கள் ஃபிளாட்டில் தூங்கும்போது உள்ளே நுழைந்து மெல்ல சித்திரவதையை தொடங்குவார். எல்லாம் ஷங்கரின் கருடபுராணம் போலத்தான். மெல்ல அடித்து உதைத்து துவண்டு பயந்து வீறிடுபவர்களை மெல்ல ரசித்து கொல்வது ராமிரெசின் பாணி. கொலையான உடல்களில் கண்கள் இருக்காது. பற்கள் உடைக்கப்பட்டிருக்கும். இந்த பாணி, சாத்தானின் சித்திரவதை என்று கூறப்பட்டிருப்பதை ஒத்திருக்கும் என கிசுகிசுக்கிறது எஃப்பிஐயின் கோப்புகள். ராமிரெசின் வருகை தந்த பயத்தினால் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்தவர்கள் பலர், படுக்கையில் படுக்காமல், ஆண் தனியாக பெண் தனியாக தூங்கி உயிரைக்காப்பாற்றிய கதைகள் வெகு பிரபலம். பின்னே உசுரு போனா வருமா? தடயம் லேது! அத்தனை கொலைகளிலும் பிணங்களை தூக்கி வந்து மார்ச்சுவரியில் போட்ட போலீசாருக்கு நயா பைசா துப்பு கூட கிடைக்கவில்லை. மிச்சம் ஒன்றுதான். அவர் அவியா என்ற ஷூக்களை அணிந்தார் என்ற