இடுகைகள்

காரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் தத்தெடுப்பு குறைந்துவருகிறது!

படம்
  இந்தியா போன்ற பல்வேறு மக்கள், இனக்குழுக்கள், சமயங்கள், கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் த த்தெடுப்பது என்பது எளிதாக நடக்க கூடியது அல்ல. சொந்த ரத்த த்தில் குழந்தை உருவாக வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் த த்தெடுப்பதை எளிதாக செய்துவிட இந்தியர்கள் இதனை ஏற்பதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். தத்தெடுப்பதை முறைப்படி செய்ய அரசு அமைப்பு காரா உள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்தால் உடனே குழந்தை கிடைத்துவிடாது. அதற்கென நீங்கள் தவமே செய்யவேண்டும்.  ஏன் என்று கேட்டால், அரசு அமைப்பில் உள்ள நடைமுறை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் பத்து முதல்  ஐந்து மணிக்குள் தான் செய்வார்கள். எனவேதான் இந்த தாமதம் நேருகிறது. இன்னொரு சிக்கல், அரசு அமைப்பு செய்வதால் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அதிகாரிகளை உலுக்குகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையில் இந்தியாவில்  குழந்தைகளை த த்தெடுப்பது சற்றே வளர்ந்து மிகவும் தேய்ந்த தொனியில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் த த்தெடுப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது.