இடுகைகள்

சி டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

படம்
    யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்) ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட் சீன டிவி தொடர் ராக்குட்டன் விக்கி ஆப் சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி. தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.   நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது காரணமாக மனம் ந

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளி