டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்
மை டியர்
கார்டியன்
சி டிராமா
40 எபிசோடுகள்
ராகுட்டன்
விக்கி ஆப்
மக்கள் விடுதலைப்படையின்
பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர்.
மேலே சொன்னதுதான்
தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக
உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள்.
சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது.
லியாங் மூ
ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்
போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில்
ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண
மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள்.
இதில் ஜூ
ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில்
இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளியால், வஞ்சகமாக கொல்லப்படுகிறார்.
அவர், இறந்துபோனவரின் மகனை தனது அடிமைபோல வைத்துக்கொள்கிறார். இதயநோய் அம்மாவை வைத்து
மிரட்டி காரியங்களை சாதிக்கிறார். பெய் யூவின் அப்பாவைக் கொன்றது, லியாங்க் என அடையாளம்
காட்டிவிடுகிறார். இதனால் ஜூவோ ரானின் சகோதரன் பெய் யூ என்பவன் ராணுவப்படை மீது குறிப்பாக
லியாங் மீது வஞ்சகம் கொள்கிறான். ஏனெனில் இவர்தான் தன் அப்பாவை கொன்றது என நினைத்துக்கொள்கிறான்.
பெய் யூவை தனது அடிமை நாய் போல வைத்து ஒல்ட் மாஸ்டர் தனது தொழிலை வளர்த்துகிறார்.
உண்மையில்
பெய் யூவுக்கு உண்மை தெரிந்ததா இல்லையா என்பதே முக்கியமான கதை. இதெல்லாம் இல்லாமல் லியாங், ராணுவ மருத்துவமனையில்
வேலை செய்யும் ஷியா சு என்ற பெண் இதயவியல் மருத்துவருக்கு இடையில் மோதல் தொடங்கி காதலாகிறது. ஷியா தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர்தான் லியாங்.
அவர் ராணுவ முகாம் அருகில் இருக்கிறது. அங்கிருந்து அடிக்கடி வீட்டுக்கு வந்து போகிறார்.
ராணுவ வீரராக வேலை செய்து வரும் லியாங்கிற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போதைப்பொருள்
தாக்குதலில் தனது நண்பனை இழந்துவிட்ட துயரம் மனதில் இருக்கிறது. இதனால் தூக்கமின்மையால்
அவதிப்படுகிறார். இறந்த நண்பனின் மனைவி, அவரது மகன் என இருவரையும் பாதுகாத்து பராமரித்து
வருகிறார். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் படுவதை அங்கேயே சொல்லிவிட்டு வருவதுதான் லியாங்கின் குணம். ஒருமுறை
தனது சகா குண்டடி பட்டார் என்ற காரணத்திற்காக, கோபத்தில் ராணுவ டாக்டர் ஷியா சுவை மருத்துவமனையில்,
அவரது மருத்துவ கோட்டை பிடுங்கி அதாலேயே அங்குள்ள தூணில் அவரை கட்டி வைத்துவிட்டு வந்துவிடுகிறார்.
ஷியாவிற்கு கோபம் வந்தால் வார்த்தையில் திட்டுவாள்,
ஆனால் லியாங்கைப் பொறுத்தவரை அடி, உதைதான். இந்த வேறுபட்ட உலகில் வாழும் இருவரும் எப்படி
காதல்வயப்படுகிறார்கள். ஒன்றாகிறார்கள். பல்வேறு பிரச்னைகளை புரிந்துகொள்கிறார்கள்
என்பது தொடரின் மற்றொரு கதை.
‘எனது மண்
எனது தேசம்’ என சுலோகன் சொல்லி நடைபெறும் கேலிக்கூத்துகளைப் பார்த்துவருகிறோம். சீனாவில்
இதெல்லாம் சொல்லாமலேயே நாடு மீது அக்கறையாக இருக்கும் ராணுவ, உள்நாட்டு காவல்துறை ஆட்களை
காட்டுகிறார்கள். ராணுவத்தின் பெருமை பேசுவது அல்டிமேட் இலக்கு என்பதால், என்ன விஷயம்
என்று கூட தெரியாமல் ராணுவ வீரர்கள் உள்ளே புகுந்து போதைக் குற்றவாளிகளை பிடிக்கிறார்கள்.
வீழ்த்துகிறார்கள். தொடரில் இவையெல்லாம் வினோதமான
காட்சிகள் அவை.
டியாங் யாங், ஷியாவோ ஷூ ஆகிய இருவரும் சந்தித்து
தம் வாழ்க்கை போராட்டங்களை பகிர்ந்துகொள்வது, காதலிக்க முயல்வது பற்றிய காட்சிகள் நன்றாக
எடுக்கப்பட்டுள்ளன. ஷியாவோ ஷூ பாத்திரத்தை நகைச்சுவையாக காட்டி,பிறகு சீரியசான ஆளாக
மாற்றியிருக்கிறார்கள்.
காதல் காட்சிகள்,
ஷியா ஷூக்கு தேறுதல் சொல்லும் லியாங்க், மருத்துவர்
ஸாங்கிடம் தனது முன்னாள் கணவரின் காதல் பற்றி மெங் ஸென் சொல்லும் காட்சி, ஷியா ஷூ வுக்கு
அவரது அம்மா, தனது காதல் வாழ்க்கை பற்றி கூறுவது, உள்நாட்டு காவல்துறை அதிகாரி ராவ்
தனது மகளை வல்லுறவு செய்த குற்றவாளியை கைது செய்ய முடியாத கோபத்தில் பேசும் காட்சி,
மருத்துவம் பற்றி மருத்துவர் ஸாங் தனது முன்னாள் மருத்துவக் காதலிக்கு விளக்கிச் சொல்வது,
என தொடரில் சில விஷயங்கள் நன்றாக உள்ளன.
உடல்தானம்
பற்றி பேசியிருக்கிறார்கள். முக்கியமான விஷயம். அது சரியாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ஐயையோ
தொடர் முடிந்தபிறகும்
சில நிமிஷங்களுக்கு மக்கள் விடுதலை ராணுவப்படையின் அருமை பெருமைகளை காட்டுகிறார்கள்.
எதற்கு இந்த பிரசாரம்?
பெய் யூ என்ற
நபர், ஜூவோ ரன் என்பவரின் இரட்டை சகோதரர்.ஜூவோ
ரன் நல்லவராம். பெய் யூ கெட்டவராம். ஆனால், உண்மையில் ஜூவோ ரன்தான் பெய் யூவை தன்னைப்போல
நடிககச் சொல்லி அவரது வாழ்க்கையைக் கெடுக்கிறார். பெற்றோரை பாதுகாக்க் சொல்லிவிட்டு
ஜூவோரன் வெளியூர் செல்கிறார். அம்மாவுக்கு இதயநோய், பராமரிக்க யாராவது ஒருவர் வேண்டும்.
அதை ஏன் ஜூவோ ரன் போல நடித்து செய்யவேண்டும்? அதுவும் ஷியா ஷூவின் காதலைக் கூட ட்ரான்ஸ்பர்
செய்து சகோதரனுக்கு கொடுப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உண்மையில் இங்குதான் ஜூவோ
ரன் உண்மையில் சைக்கோபாத்தா என சந்தேகமே வருகிறது.
பெய் யூ இதயத்தசைகள்
பலவீனமானவர். லியாங்கின் பெயரை போனில் கேட்டதற்கே இதயம் வலித்து மயங்கி விழுகிறார்.
இந்த லட்சணத்தில் அவர் போதைப்பொருள் விற்றார் என காட்டினால் கூட பரவாயில்லை. ராணுவத்தில்
வேலைசெய்து பிறகு கூலிப்படையில் சேர்ந்து இயங்கியவர் என கதை கட்டுகிறார்கள். அடிக்கடி
நெஞ்சுவலி வருகிற ஆளை ராணுவத்தில் சேர்ப்பார்களா, அல்லது கூலிப்படையில்தான் அவர் செயல்பட
முடியுமா?
மீ கு பாத்திரத்தை
எல்லாம் தெரிந்த முட்டாள் என கூறலாம். பெய் யூ அவளை காதலிக்கவில்லை என தெரியும். ஆனால்
அவள் அவனை காதலிக்கிறாள். உடலுறவு கூட வைத்துக்கொள்கிறாள். மேலும், அவனைப் பற்றிய தகவல்களை
தேடிக்கொணடே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்கிறாள்.
முறைப்படி
தொடரில் பெய் யூவை கைது செய்தது போல மீ குவையும் குற்றவாளி க்கு உதவிய குற்றச்சாட்டில்
கைது செய்யவேண்டும். ஏனெனில் அவள்தான் லியாங்கின் மருந்துகளை மாற்றுகிறாள். அவனைப்பற்றிய
உண்மை தெரிந்தபின்னரும் கூட காவல்துறைக்கு சொல்லாமல் இருக்கிறாள். இத்தனைக்கும் அவள்
ஊடகத்தில் இருக்கிற ஆள். ஏன் குற்றவாளியைக் காட்டிக்கொடுக்கவில்லை. காதல். அதுதான்
காரணம் என தொடர் இயக்குநர் சப்பைக் கட்டு கட்டுகிறார். ஏற்கமுடியாத வாதம்.
உள்நாட்டு காவல்துறையினர் தொடரில் ஏதும் செய்வதில்லை.
அங்கும் இங்கும் நடக்கிறார்கள். மீட்டிங் போடுகிறார்கள். காரில் செல்கிறார்க்ள். உருப்படியான
காரியங்களை எல்லாம் மக்கள் விடுதலை ராணுவப்படைதான் செய்கிறது. உள்நாட்டு காவல்துறை
விசாரிக்கிறது விசாரிக்கிறது. வழக்கை விசாரித்துக்கொண்டே இருக்கிறது.
மருத்துவர்
ஸாங், ராணுவ வீரரின் மனைவி மெங் காதல் காட்சிகள் உயிரோட்டமாகவே இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே
இயக்குநர் சார்?
இருபது எபிசோடில் முடியவேண்டிய கதையை, நாற்பது எபிசோடுகள்
இழுஇழுவென இழுத்து விட்டனர்.
நாட்டில் ராணுவ ஆட்சியே மட்டற்ற மகிழ்ச்சி என்பவர்கள் தொடரை தாராளமாக பார்க்கலாம்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக