மனிதர்கள் தங்களை மறக்க நினைப்பது ஏன்? ஜே கிருஷ்ணமூர்த்தி

 






ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி


இரவு கிளப்புகளில், பொழுதுபோக்கு பூங்காக்களில், பயணத்தில் செல்வச்செழிப்பானவர்கள் தங்களை மறக்க நினைக்கிறார்கள்.  சற்று தந்திரமானவர்கள், தங்களை மறக்க புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  முட்டாள்கள், தங்களை மறக்க மக்கள் கூட்டத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆன்மிக குரு, அவர்களுக்கு எப்படி, என்ன செய்யவேண்டுமென கூறுகிறார். பேராசை கொண்டவர்கள் தங்களை மறக்க ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  நாம் அனைவருமே முதிர்ச்சியானவர்களாக வயதானவர்களாக மாறிக்கொண்டே நம்மை நாமே மறக்க முயல்கிறோம்.

வாரணாசி

22 ஜனவரி 1954

லீவிங் ஸ்கூல்- என்டரிங் லைஃப்              

அமைதியில்லாத மனம், தொடர்ச்சியாக தனது உணர்வு மற்றும் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அது நிரம்பியதாக அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தோன்றும். பல்வேறு உணர்ச்சிகள், கடந்து செல்லும் ஆர்வங்கள், கிசுகிசு ஆகியவை மனதை நிரப்புகின்றன.

பிறர் சார்ந்த விஷயங்களே ஒருவரின் மனதை அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. வார, மாதம இதழ்கள், நாளிதழ்களில் கிசுகிசு பத்திகள், கொலை, விவகாரத்து என ஏராளமான செய்திகள் வெளியாகின்றன. இவையெல்லாம் மனிதரின் புறமெய்மை நிரப்பினாலும், உள்மெய்யான மனதில் வெறுமையை உருவாக்குகிறது. எவ்வளவு தூரம் புறமெய் செய்திகளால் நிரப்பப்படுகிறதோ, அந்தளவு பல்வேறு உணர்ச்சிகளுக்கு உட்பட்டதாக, கவனச்சிதறல்களுக்கு பலியாகும் வகையில் மனம் இயங்குகிறது. நவீன வாழ்க்கை, இதுபோன்ற செயல்பாடுகளை, கவனச்சிதறல்களை ஊக்கப்படுத்துகிறது.

கமெண்டரிஸ் அன் லிவ்விங்

 

நாம் எதிர்காலத்திற்கு போதிய கவனம் கொடுத்து கவனிப்பதில்லை. டிவிசேனல்களைப் பாருங்கள். அதில் காலையில் தொடங்கி நள்ளிரவு வரை உங்களை மகிழ்விப்பதற்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். உலகம் முழுக்க  இப்படித்தான் நடக்கிறது. குழந்தைகளை மகிழ்விப்பதற்கான நிகழ்ச்சிகளும் இந்த முறையில் அவர்களை ஒளிபரப்பாகின்றன. இந்த குழந்தைகளின் எதிர்காலம்தான் என்ன?

ஒரு மைதானத்தில் வீரர்கள் விளையாடுகிறார்கள். அதை சுற்றி இருந்து முப்பது, நாற்பதாயிரம் மக்கள் கோஷம் எழுப்பியபடி ஆக்ரோஷமாக ஆடியபடி பார்க்கிறார்கள். இந்த வகையில் ஒருவரின் மனம் பொழுதுபோக்கால், விளையாட்டால், மகிழ்ச்சியால்  நிரப்பப்படுகிறது. இதை உலகம் முழுக்க பார்க்கிறார்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு, பூங்கா என ஒருவரின் மனம் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. உண்மையில் ஒருவர் இதன் எதிர்காலம் பற்றி கேட்கவேண்டும்.

பொழுதுபோக்குத் துறையைப் பொறுத்தவரையில், இளைஞர்கள், மாணவர்கள, சிறுவர்கள் என அனைவருமே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி தரும் என நினைக்கிறார்கள். ஒருவர் தன்னிடமிருந்து தப்பிச்செல்லவே பொழுதுபோக்கை தேடுகிறார். உளவியலாளர்கள், நோயாளியே சோதிக்கும்போது மனதிலுள்ள எண்ணங்களை வெளியே கூறுங்கள் என கூறச்செய்வார்கள். இப்படி கூறப்படும் சம்பவம் மனதை அழுத்தும் சம்பவம், வேதனை, ஒருவரின் இழப்பாக இருக்கலாம். எந்தளவு ஆழமாக விளையாட்டு, பொழுதுபோக்கு என ஒருவர் செல்கிறாரோ அந்தளவு அவர் தன்னிடமிருந்து விலகிச் செல்கிறார் என்று அர்த்தம்.

கிருஷ்ணமூர்த்தி டு ஹிம்செல்ஃப்

18 மார்ச் 1983

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்