உலகின் நீளமான பாம்புகள்

 








உலகின் நீளமான பாம்புகள்

 

ரெட்டிகுலேட்டட் பைத்தான்

அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ்

காணப்படும் இடம் -தெற்காசியா

பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது.

க்ரீன் அனகோண்டா

அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ்

கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி

8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது.

அமேதிஸ்டைன் பைத்தான்

மோரேலியா அமேதிஸ்டியானா

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ்

8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும்.

ஆப்பிரிக்கன் ராக் பைத்தான்

பைத்தான் செபே

சப் சகாரா ஆப்பிரிக்கா

7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது.

பர்மீஸ் பைத்தான்

பைத்தான் பைவிட்டாடஸ்

தெற்காசியா, இந்தியா, சீனா

5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட உண்ணும் திறன் பெற்றது.

கிங் கோப்ரா

ஆபியோபாகஸ் ஹன்னா

இந்தியா, சீனா, தெற்காசியா

5.71 மீட்டர் நீளம் கொண்டது. இதன் விஷத்தை பாய்ச்சினால் ஒரே நேரத்தில் இருபது  பேர்களை கொல்ல முடியும். உலகில் பலரும் பயப்படும் விஷப்பாம்பு ரகங்களில் ஒன்று.

இந்தியன் ராக் பைத்தான்

பைத்தான் மொலுரஸ்

தெற்காசியா

4-5 மீட்டர் நீளம் கொண்டது. நூற்றுக்கும் மேலான முட்டைகளை ஒரே நேரத்தில் தன் உடல் சூட்டால் பொறிக்கும் திறன் பெற்றது.

யெல்லோ அனகோண்டா

யுனெக்டெஸ் நொட்டேயஸ்

4.6 மீட்டர் நீளம் கொண்டது. பெண் பாம்பு, ஆணை விட இரண்டு மடங்கு அதிக நீளமாக இருக்கும்.

போவா கன்ட்ஸ்டிரிக்டர்

போவா கன்ஸ்ட்ரிக்டர்

மத்திய அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா

4.3 மீட்டர நீளம் கொண்டது. இரையை மூச்சு திணறடித்துக் கொள்ளும் சாதாரண பாம்பு.

பிளாக் மாம்பா

டென்ட்ரோஸ்பிஸ் பாலிலெபிஸ்

சப் சகாரா ஆப்பிரிக்கா

4.3 மீட்டர் நீளம் கொண்டது. ஆபத்து வரும்போது தன்னைக் காத்துக்கொள்ள கருப்பு வாயை அகலமாக திறக்கிறது. அதுவே பெரும் பீதியை தருகிறது. இந்த பயமும், விஷமும் மனிதர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைக்கிறது.

 

-அவர் வேர்ல்ட் இன் நம்பர் என்சைக்ளோபீடியா

image - pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்