இதுவே சரியான நேரம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

 







ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார்

 

ரோபோக்கள் மேம்படுத்தப்படும்போது, மனிதர்கள் தினசரி இரண்டு மணி நேரம் வேலை  செய்தால் போதுமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகும். அப்போது மனிதர்கள் என்ன செய்வார்கள்? பொழுதுபோக்கு துறையால் ஈர்க்கப்படுவார்களா? அல்லது  அந்த துறையில் உள்ள விஷயங்களை கவனித்து சோதித்துப் பார்ப்பார்களா? இவைதான் மனிதர்களுக்கான  இரண்டு வாய்ப்புகளாக  உள்ளன.

சானன்

21 ஜூலை 1981

தி நெட்வார்க் ஆஃப் தாட்

 

நீங்கள் கொண்டிருக்கும் வரைமுறையிலான திறன்கள் மற்றும் பரிசுகள் ஆபத்தான நண்பர்களாக உள்ளன. அவை உங்களுக்கு புரியாத தன்மையையும், சோகத்தையும் கொண்டு வருவதில்தான் நிறைவுபெறுகின்றன. உங்களது உணவு, உடை, பாவனை, மகிழ்ச்சி ஆகியவை மெல்ல சோர்வுற்றவராக மாற்றுகிறது.

உங்களது மனது உணர்ச்சிகளற்றதாக, விஷயங்களை புரிந்துகொள்ளும் திறனை விரைவில் இழப்பதாக உள்ளது. சக்திவாய்ந்த மனம் நிறைய செயல்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, உரையாடுகிறது. நடனமாடுகிறது. இதற்கென அதற்கு காரணங்கள்,முடிவு, விழிப்புணர்வு ஆகியவை உள்ளன. இதன் வழியாக அமைதி, தெளிவு கிடைக்கிறது.

தி வேர்ல்ட் வித் இன்

தன்னை அறிந்துகொள்ளும் அறிவு என்பது முக்கியமானது. இந்த வகையில் ஒருவர் தன்னை அறியாதபோது, உலகம் நேர்த்தியாக அமையாது. கருத்து, உணர்வு, செயல்பாடு ஆகியவற்றை ஒருவர் உணராதபோது உலக அமைதி ஒத்திசைவு, பாதுகாப்பு அமையாது. எனவே, ஒருவர் தன்னைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வது முக்கியமாகிறது. இதில் தப்பிச்செல்வதற்கு வழியேதும் இல்லை.  

ஒருவர் தன்னை உணர்வதற்கு பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதில் விமர்சனம், புகார், தீர்ப்பு என எதுவும் இல்லை. தினசரி வாழ்க்கையில் ஒருவர் கொள்ளும் விழிப்புணர்வு குறுகியதாக இருக்காது.  தெளிவானதாக, விரிவானதாக, இருக்கும். இந்த விழிப்புணர்வுக்கு  வெளியே ஒருவரின் சுயமும், அவரின் உறவுகளும் இருக்கும்.

பூனா

19 செப்டம்பர் 1948

தி கலெக்டட் வொர்க்ஸ் வால்.5

நீங்கள் வேதனைப்படவில்லை, முரண்பாடுகளில் சிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை, எந்த சரிவுகளும் வாழ்க்கையில் ஏற்படவில்லை என்றால் அதைப்பற்றி மிக குறைவாகவே கூற முடியும். நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது, நடைபெறும் செயல்பாடு உங்கள் விழித்தெழ செய்யவேண்டும். உங்களுக்கு வேதனை  ஏற்படும்போது, அதற்கு உடனே தீர்வு தேடி வாழ்வை எளிதாக்கி வேதனையில் இருந்து வெளியே வந்து விடுகிறீர்கள். நீங்கள் எப்போதும் சொகுசை தேடுகிறீர்கள். அதன் வழியாக உறக்கத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள். மனம் அதிர்ச்சி வழியாகவே விழித்தெழுகிறது. அதை நீங்கள் வேதனை என்கிறீர்கள். இந்த நிலையில் சொகுசை தேடாமல் வேதனை பற்றிய விசாரணையைத் தொடங்கவேண்டும். இதுவே சரியான நேரம்.

மான்டெவீடியோ

26 ஜூன் 1935

தி கலெக்டட் வொர்க்ஸ்  வால். 2

 

நீங்கள் முரண்பாடுகளில் விழிப்புணர்வற்று இருக்கிறீர்கள். இங்கு, ஒருவரின் சுயம் மற்றும் வெளிப்புறச் சூழல் ஆகியவற்றுக்கு இடையில் சண்டை நடைபெறுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், நீங்கள் அப்படியே இருக்கலாம். எதற்காக தீர்வுகளை தேடுகிறீர்கள்? எதையோ இழந்துவிட்டோம் என்ற பயத்தால் செயற்கையாக முரண்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். வாழ்க்கை உங்களை எப்போதும் விட்டுச்செல்லாது.

ஓஜாய்

18 ஜூன் 1934

தி கலெக்டட் வொர்க்ஸ் வால்.2


கருத்துகள்