நான் என்னோடு போட்டியிட்டு மேம்படுத்திக்கொள்ள முயல்கிறேன் - ஷனாயா கபூர், இந்தி திரைப்பட நடிகை

 




ஷனாயா கபூர்






ஷனாயா கபூர்

இந்தி திரைப்பட நடிகை

கரண் ஜோகரின் இந்தி படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது நடிகை ஆகியிருக்கிறார். 23 வயதில் அவர் பேசும் விஷயங்கள் சற்று ஆச்சரியமாகவே இருக்கின்றன.

ஷனாயா என்பவர் தனிப்பட்ட மனிதராக எப்படி?

 என்னுடைய ஆளுமை என்பது வேலையை அடிப்படையாக கொண்டது. நடிப்பதை நான் வேலையாக பார்ப்பதில்லை. சில சமயங்களில் வேலையை அதீதமாக எடுத்துக்கொள்வதுண்டு. எனது குழுவினருடன் இணைந்து கேமரா முன்னே வேலை செய்வது வேடிக்கையான ஒன்று. இதை என்னுடைய நீட்சியாகவே பார்க்கிறேன்.

காலையில் எழும் பழக்கமுடையவரா?

இல்லை. நான் இரவில் விழித்துக்கொண்டு இந்தி, ஆங்கில, கொரியன் படங்களைப் பார்த்துக்கொண்டிருபேன். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க நான் விழித்துக்கொண்டு ஏதேனும் செய்துகொண்டிருப்பேன்.இப்போது மைசூரில் விருசபா படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு இரவில் தேவதாஸ் படத்தை இரவில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், உறுதியாக காலையில் வேகமாக எழும் பெண் நானில்லை.

உங்கள் குடும்பத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள். நடிகர்கள் உள்ளது , அழுத்தம் தருகிறதா?

எங்கள் குடும்பத்தில் தயாரிப்பாளர்கள், உடை வடிவமைப்பாளர்கள், நடிகர்கள் உண்டு. பொதுவாகவே நாங்கள் திரைப்படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ஏனெனில் எங்கள் குடும்பமே திரைத்துறை சார்ந்தது. என்னுடைய சகோதரி அன்சுலா கபூர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார். அவர், அவருக்கு பிடித்த வேலையை செய்கிறார். நாங்கள் எங்கள் இதயத்தை பின்தொடர்ந்து செல்கிறோம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த நடிகர்கள், பிற நட்சத்திரங்களோடு ஒப்பீடு செய்யப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்? பயமாக இருக்கிறதா?

நானும் மனிதன்தான். ஒப்பீடு செய்யப்படும் செய்திகளைப் பார்த்து, கேலி, கிண்டல் செய்யப்படுவதை கேள்விப்பட்டு பயப்படுவது உண்டு. ஆனால், நான் நடிகர் ஷாரூக்கான்  சொன்னதைப் பின்பற்றுகிறேன். அவர்,  ‘’நான் என்னோடு போட்டியிடுகிறேன். போட்டியில் பங்கேற்கும்போது, எங்கே போட்டியின் இறுதியான இடம் இருக்கிறது என பார்த்து அதை நோக்கி பயணிப்பதே முக்கியம். அதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்’’ என்று கூறினார். இந்த திரைப்படத்துறையில் அனைவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அது பிறரிடம் இருக்காது. நான் என்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறேன். நேற்றை விட இன்றைக்கு எப்படி மேம்பட்டிருக்கிறேன் என்பதே முக்கியம். இப்படித்தான் ஒருவர் சிந்திக்கவேண்டும் என நினைக்கிறேன்.

அப்படியென்றால், மற்றவர்களோடு நீங்கள் பந்தயத்தில் ஓடவில்லையா?

ஒருவருக்கு பதினெட்டிலிருந்து இருபத்து மூன்று வயதில் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இதனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன், பாதுகாப்பற்று இருக்கிறேன் என்று பொருள் அல்ல. எனக்கான நாட்கள் வரும். அனைவரின் வாழ்க்கையிலும் விதி உள்ளது. அவர்களது பயணத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் இரண்டுமே ச்ந்திக்கவேண்டியதிருக்கும்.  

உங்கள் மனதிலுள்ள பாதுகாப்பின்மையாக எவற்றைக் கூறுவீர்கள்?

நாம் அனைவரும் மனிதர்கள். எனவே பாதுகாப்பின்மை நிச்சயம் உண்டு. நீங்கள் ஒரு வேலையை செய்கிறீர்கள். எனவே, அதுகுறித்த நிச்சயமின்மைகள் உங்களுக்கு இருக்கும். இதற்கு காரணம், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதுதான். கேமராவை எதிர்கொள்ளும்போது அதன் முன்னால எந்த உணர்வும் இல்லாமல் ஒருவர் இருக்கமுடியாது. எனவே, என்னுடைய பயணத்தில் என்னுடைய இயல்புகளை முழுக்க இழக்க கூடாது என நினைக்கிறேன். அதற்காகவே உழைத்து வருகிறேன்.  கிசுகிசுக்கள் கேலி, கிண்டல்கள் ஒருவரை முழுமையாக பாதிக்காமல் இருக்காது. ஆனால், அப்போதெல்லாம் நான் கேமராவின் முன்னே நிற்கவே வேலை செய்கிறோம். அது நம் வேலை என சொல்லிக்கொள்வேன். பதினெட்டு வயதிலிருந்தே நான் இந்த மனநிலையை வளர்த்து வருகிறேன்.

 பதினெட்டு வயது ஷனாயா, இருபத்து மூன்று வயது ஷனாயாவை சந்தித்தால் எப்படியிருக்கும்?

ஒவ்வொருவரின் பயணம் வேறுபட்டது. அவரவருக்கென விதி இருக்கிறது. எனவே, அதை நோக்கி உழைக்கவேண்டும். நிதானமாக, அமைதியாக மனதை வைத்துக்கொள் என பதினெட்டு வயது ஷனாயாவைப் பார்த்து கூறுவேன். கலை வடிவத்தில் பங்கு ப்பெற வந்திருக்கிறேன். இரைச்சல் எழுப்ப அல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்வேன்.

காஸ்மோபாலிட்டன் இதழ்

சிமி குரியாகோஷ்

 


கருத்துகள்