தெரிஞ்சுக்கோ - நாடும் நாட்டு மக்களும்
தனது நாட்டின்
மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை கலவரத்தை பற்றி, அதன் ஆட்சித்தலைவர்
புன்னகையுடன பேச முடிகிற காலத்தை எட்டியிருக்கிறோம். சமகாலத்தில் உற்பத்தி திறனில்
அல்ல மக்கள்தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நிறைய மக்கள் நாட்டை விட்டு வேறு
இடங்களுக்கு வேலை தேடி, பொருளாதாரத்திற்காக நகர்கிறார்கள். பணக்காரர்கள், ஏழைகளுக்கான
வேறுபாடு என்பது மேலும் அதிகரித்தபடியே இருக்கிறது.நாடு, நாட்டு மக்கள் பற்றிய சில புள்ளிவிவரங்களைப் பற்றி பார்ப்போம்.
250 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் தோராய ஆயுள
29 ஆண்டுகள். 2019ஆம்ஆண்டு 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.
2020ஆம் ஆண்டில்
மட்டும் உலகெங்கும் 140 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன.
2019ஆம் ஆண்டில்
மட்டும் 55 மில்லியன் மக்கள் ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ளனர்.
உலகளவில்
வறுமைக்கோடு என்பது, தினசரி 1.90 டாலர்களுக்கு குறைவாக சம்பாதிக்கும் மக்களை கணக்கிட்டு உருவாக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு
ஐரோப்பாவில் 141 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
2018ஆம் ஆண்டு
உலக நாடுகளுக்கு, இடம்பெயர்ந்த 52 சதவீத அகதிகளின் தோராய வயது 18க்குள்தான் இருந்தது.
போர், இயற்கை
பேரிடர், பொருளாதார தேவை ஆகியவற்றுக்காக 79.5 மில்லியன் மக்கள் தாயகத்தை விட்டு வேறு
நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
உணவு, ஊட்டச்சத்து
இல்லாமல் உலகம் முழுக்க 800 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்கா
கண்டத்தில் மொத்தம் 54 நாடுகள் உள்ளன.
வட அமெரிக்காவில்
உள்ள பெரிய ஏரிகளில் ஐந்து முக்கியமானவை. உலகில் 21 சதவீத நன்னீர் இங்குதான் உள்ளது. அவை ஹூரோன், இரி, சுப்பீரியர், மிச்சிகன், ஒன்டாரியோ.
ஆப்பிரிக்க
நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான்.
ஐரோப்பாவில் பாதி மக்கள்தொகையினர், 42 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.
உலக மக்கள்தொகையில்
ஐந்தில் மூன்று பங்கினர் ஆசியாவில் வாழ்கின்றனர்.
ஆப்பிரிக்காவில்
நவீன மனித இன வெர்ஷனான ஹோமோசெபியன்ஸ் பரிணாம
வளர்ச்சி பெற்று 3 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.
இரு கண்டங்களில்
அடையாளப்படுத்தப்படும் நாடுகள் உள்ளன. ரஷ்யா,
துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், அசர்பைஜான் ஆகிய ஐந்து நாடுகள் ஐரோப்பா, ஆசியா என இருகண்டங்களிலும்
இணைந்துள்ளன.
உலகின் பத்து
சிறிய நாடுகளில் ஐந்து ஐரோப்பாவில் உள்ளன. அவை, வாட்டிகன் நகரம், மொனாகோ, சான் மரினோ,
லிட்ச்சென்ஸ்டெய்ன், மால்டா.
அவர் வேர்ல்ட்
இன் நம்பர்ஸ்
தொகுப்பு
– மன்னார்சாமி
கருத்துகள்
கருத்துரையிடுக